ஜவஹர் நவோதயா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜவஹர் நவோதயா வித்யாலயா(Jawahar Navodaya Vidyalaya, சுருக்கமாக JNV) பள்ளிக்கூடங்கள் திறன்வாய்ந்த மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி வழங்கும் வண்ணம் இந்திய அரசினால் வடிவமைக்கப்பட்டவையாகும். தனியார் நடத்தும் சிறப்புப் பள்ளிகளுக்கு இணையான தரம் கூடியக் கல்வித்திட்டத்தை சிற்றூர் சிறார்களும், அவர்களது குடும்ப வருமானம்,சமூகநிலை எத்தகையதாக இருப்பினும், பெற்றிடவேண்டும் என்ற குறிக்கோளுடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இப்பள்ளிகள் தமிழகத்தைத் தவிர்த்து நாட்டின் பல இடங்களில் அமைந்துள்ளன. 2010 வரை ஏறத்தாழ 593 பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் நடத்தப்படும் அனைத்திந்திய நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு பல்துறை திறன்களிலும் கல்வி வழங்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

கிராமப்புர மாணவர்களிடையே ஆட்சித்திறனை வளர்த்தெடுக்கும் விதமாக நரசிம்ம ராவ் முனைப்பால் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1985ஆம் ஆண்டு முதலில் நிறுவப்பட்டது. [1] துவக்கத்தில் நவோதயா வித்யாலயங்கள் என்று பெயர்சூட்டப்பட்டிருந்த இப்பள்ளிகளுக்கு பின்னர் ஜவஹர் நவோதயா வித்யாலயங்கள் என ஜவகர்லால் நேருவின் நூற்றாண்டு பிறந்தவிழாக் கொண்டாட்டங்களின் போது மறுபெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பி.வி.நரசிம்ம ராவ் நடுவண் அமைச்சில் மனிதவளத்துறை அமைச்சராக பணிபுரிந்து வந்தார் நம்பிக்கை தரும் பள்ளிகள் - பிசினசு டுடே கட்டுரை

வெளியிணைப்புகள்[தொகு]