ஜமீலா ஹம்மாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜமிலா ஹம்மாமி (Jamila Hammami ) இவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஓமானில் பணித் தலைவராக உள்ளார். [1]

வாழ்க்கை[தொகு]

ஜமீலா ஹம்மாமி ஐக்ஸ்-மார்சேய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இவர் 2002இல் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். 2008ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 62 ஈராக்கிய வீரர்களின் குடும்பங்களைக் கண்டுபிடிக்க ஈராக் அதிகாரிகளுக்கு இவர் அழைப்பு விடுத்தார். [2] அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஈரான்-ஈராக் போரில் கொல்லப்பட்ட கிட்டத்தட்ட 250 வீரர்களின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்தார். [3] 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இவர் காத்மாண்டுவில் பணிபுரிந்து வந்தார். நேபாள உள்நாட்டுப் போரில் தப்பியவர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளித்தார். [4] [5] 2014-5 ஆம் ஆண்டில் , லெபனானின் திரிப்போலியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் குழுத் தலைவராக இருந்தார். சிரிய உள்நாட்டுப் போரிலிருந்து பரவிய ஆயுத வன்முறையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் இணைந்து பணியாற்றினார். [6]

குறிப்புகள்[தொகு]

  1. Sebastian Castelier, Oman’s humanitarian aid to Yemen also pragmatic, Al-Monitor, January 9, 2020. Accessed March 14, 2020.
  2. Saudi returns bodies of Iraqis killed in Gulf War, Reuters, April 3, 2008. Accessed March 14, 2020.
  3. Red Cross brokers swap of Iranian and Iraqi war dead பரணிடப்பட்டது 2021-06-04 at the வந்தவழி இயந்திரம், The Daily Star, December 1, 2008. Accessed March 14, 2020.
  4. Relatives of the missing struggle with legal void, social taboo, The New Humanitarian, December 29, 2010. Accessed March 14, 2020.
  5. Brendan Brady, The Ghosts of Nepal’s ‘Disappeared’, The Diplomat, March 26, 2011. Accessed March 14, 2020.
  6. Lebanon: Strengthening the resilience of communities affected by violence, ICRC, February 11, 2015. Accessed March 14, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமீலா_ஹம்மாமி&oldid=3367959" இலிருந்து மீள்விக்கப்பட்டது