ஜமீதா பீவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜமிதா ஆசிரியர் (Jamitha Teacher) என்பவர் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பெண் ஆர்வலர் ஆவார், ஆண்கள் பெண்கள் என இருபாலரும் கலந்துக் கொண்ட ஒரு கலப்பு இசுலாமிய சமயக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் ஆவார். இவர் குர்ஆன் சுன்னத் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.

தொடக்க கால வாழ்க்கை[தொகு]

இவரது குடும்பத்தில் 13 குழந்தைகளில் இவர் இளையவர். இவரது தந்தை இந்திய இராணுவத்தில் இருந்தார். இவர் மலப்புறத்தில் உள்ள ஜாமியா நட்வியா அரபு கல்லூரியில் படித்தார். [1][2]

கொலை மிரட்டல்[தொகு]

இவரது நடவடிக்கைகள் சில பிரிவுகளிடமிருந்து எதிர்மறையான விளைவுகளைத் தூண்டியுள்ளன. இசுலாமிய அமைப்புகளின் உறுப்பினர்கள் இவரைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியுள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், "இவர்கள் எந்தவொரு சீர்திருத்தத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாத தீவிரவாதிகள். ஜமீதா, “எனக்கு புலனம், வலையொளி, முகநூல் அச்சுறுத்தல்கள் வந்துள்ளன, ஆனால் நான் பயப்படவில்லை" என்றும் அவர் கூறுகிறார்.தேவைப்பட்டால் நான் காவல்துறை பாதுகாப்பைக் கேட்பேன், ஆனால் நான் எனது பணியைத் தொடருவேன். பெண்களைத் தடுத்து நிறுத்தும் எல்லாவற்றையும் நாம் மாற்றாவிட்டால் இந்தியா ஒரு நாடாக எப்படி வளர முடியும்?" என்றும் இவர் கூறியுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Meet Jamida Beevi, the first Muslim woman to lead Friday prayers in India". Scroll. 30 January 2018. பார்க்கப்பட்ட நாள் 2 April 2020.
  2. "'Quran has capacity to reflect and absorb changes in society over time … it did not discriminate between men and women'". The Economic Times. 16 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2 April 2020.
  3. "Muslim woman receives death threats after leading prayers in Kerala". Amrit Dhillon. The Guardian. 30 June 2018. பார்க்கப்பட்ட நாள் 2 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமீதா_பீவி&oldid=3954723" இலிருந்து மீள்விக்கப்பட்டது