ஜனாதிபத்திய சம்ரக்‌ஷண சமிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜனாதிபத்திய சம்ரக்‌ஷண சமிதி
Janathipathiya Samrakshana Samithy
தலைவர்ஏ. என். ராஜன்பாபு
தொடக்கம்1918
தலைமையகம்கேரள மாநில குழு அலுவலகம், அயர்ன் பிரிட்ஜ் (அஞ்சல்), ஆலப்புழா-688011, கேரளா.
கூட்டணிஐக்கிய ஜனநாயக முன்னணி
இந்தியா அரசியல்

ஜனாதிபத்திய சம்ரக்‌ஷண சமிதி அல்லது மக்களாட்சிப் பாதுகாப்புப் பேரவை (Janathipathiya Samrakshana Samithy-JSS) இந்தியாவின் கேரள மாநில அரசியல் கட்சியாகும். இக் கட்சி 1994 இல் கே. ஆர். கௌரி அம்மாவால் தோற்றுவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இக் கட்சியைப் புதிதாகத் தோற்றுவித்தார். இந்திய தேசிய காங்கிரசின் தலைமையில் கேரளாவில் அமைந்த ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இக் கட்சி ஒரு உறுப்புக் கட்சியாக இணைந்தது. 2001 இல் நடந்த கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இத் தேர்தலில் அரூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌரி அம்மா, ஏ. கே. அந்தோணியின் அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

தலைமை[தொகு]

இக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. ஆர். கௌரி அம்மா; மாநிலத் தலைவர் ஏ. என். ராஜன்பாபு; வி. ஹெச். சத்ஜித் மற்றும் என். என். சதானந்தனும் கட்சியின் மாநிலச் செயலாளர்கள்.

நடத்தாளர்[தொகு]

  • பஷீர் பூவாட்டுபறம்பு (Basheer Poovaattuparambu)

அமைப்புகள்[தொகு]

  • ஜனாதிபத்திய மகிள சமிதி (Janadhipathiya Mahila samithy-JMS)
  • ஜனாதிபத்திய யுவஜன சமிதி (Janathipathiya Yuvajana Samithy-JYS)
  • ஜனாதிபத்திய தொழிற்சங்க மையம் (Janathipathiya Trade Union Centre-JTUC)
  • ஜனாதிபத்திய விவசாயிகள் சமிதி (Janathipathiya Karshaka Samithy-JKS)
  • கேரள விவசாயிகள் தொழிலாளி சங்கம் (kerala Karshaka Thozhilaly Union-KKTU)
  • ஜனநாயக பணியாளர் மற்றும் ஆசிரியர் அவையின் கூட்டமைப்பு (Federation Of Democratic Employees And Teachers Organization-FDETO)
  • ஜனாதிபத்திய அபிபாஷக சமிதி (Janathipathya Abhibhashaka Samithi-JAS)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆலப்புழாவில் சுவரொன்றில் எழுதப்பட்டுள்ள- JSS