உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் ஆல்கைல் சல்பேட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோடியம் ஆல்கைல் சல்பேட்டுகள் (Sodium alkyl sulphates) என்பவை நீரில் கரையும் உப்புகளாகும். இவை அழுக்கு நீக்கிகள் அல்லது ஈரமாக்கும் முகவர்களாகச் செயல்படுகின்றன.

பண்புகள்[தொகு]

சோடியம் ஆல்கைல் சல்பேட்டு என்பது சோடியம் ஆல்கைல் சல்பேட்டுகள் என்ற பொதுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒரு தனி உப்பு ஆகும். வெவ்வேறு ஆல்கைல்களின் கலவை இவ்வுப்பு என்பதை இதன் பெயரே அடையாளம் காட்டுகிறது. உதாரணம் சோடியம் லாரைல் சல்பேட்டு. இவையாவும் வெளிர் மஞ்சள் நிறத்திலான திண்மங்கள்/தூள்கள்/அடர்நீர்மங்களாகும். இவை அழுக்கு நீக்கியைப் போல மணம் வீசுகின்றன. நிரில் கரைகின்றன மற்றும் சோப்புக் குமிழ்களாக உருவாகின்றன. இதன் பொது வேதி வாய்ப்பாடு CnH2n+1OSO2O Na ஆகும். மேலும் இதனுடைய சிஏஎசு எண் 68955-19-1 ஆகும் [1]. கொதிக்கும்போது சோடியம் ஆல்கைல் சல்பேட்டு சிதைவடைகிறது. 50 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீராற்பகுப்பு அடைகிறது.

பயன்[தொகு]

அழுக்குநீக்கிகள், பாத்திரங்கள் கழுவும் நீர்மங்கள், மழைக் கூழ்மங்கள், தலைக் குளியல் நீர்மங்கள், முடிச்சீராக்கிகள், துணி மென்மைப்படுத்திகள் போன்றவற்றில் சோடியம் ஆல்கைல் சல்பேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன [2]. எளிதில் தீப்பற்றாது என்பதால் இதை தீத்தடுப்பு முகவராகப் பயனபடுத்துகிறார்கள். ஈரபதமூட்டும் பொருட்கள் அல்லது பற்பசை போன்ற எண்ணெய்ப் பசையும் நீரில் கரையக்கூடியதுமான சேர்மங்களை கலக்க ஒரு பால்மமாக்கியாக இது உபயோகமாகிறது [2].

தீங்குகள்[தொகு]

உடல்நலம்[தொகு]

சூடாக்கும்போது இவை கார்பனீராக்சைடு, கார்பனோராக்சைடு, கந்தக டை ஆக்சைடு போன்ற வாயுக்களை உள்ளடக்கிய மற்றும் பல எரிச்சலூட்டும் ஆவிகளை உற்பத்தி செய்கின்றன. எல்லா அழுக்கு நீக்கிகளையும் போல இதுவும் கண்களிலும் தோலிலும் எரிச்சலை உண்டாக்குகிறது. உட்கொள்ளப்பட்டால் குமட்டல் வாந்தி போன்ற உபாதைகளுடன் இதனுடைய உயிர் கொல்லும் அளவு (LD50) 0.5 முதல் 5 கிராம்/ கிலோகிராம் ஆகும் [1].

சுற்றுச்சூழல்[தொகு]

நன்னீர் நீர் வாழ் மீன்களுக்கு ஒரு நச்சாக இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் நீர்நச்சு அளவு மில்லியனுக்கு 6-7 பகுதிகள்/மீன்/நிமிடம் என்று குறிக்கப்படுகிறது. உணவுச் சங்கிலியில் இது அவ்வளவாக முக்கியத்துவம் பெறுவதில்லை [1]. கிளைச்சங்கிலி ஆல்க்கீன்கள் பாக்டிரியாக்களால் நிகழும் தரங்குறைத்தல் வினையை எதிர்க்கின்றன என்பதால் நேர்கோட்டு ஆல்கைல் சல்போனேட்டுகள் அழுக்குநீக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "SODIUM ALKYL SULFATES". CAMEO Chemicals, version 2.5 rev 1. National Oceanic and Atmospheric Administration. n.d. பார்க்கப்பட்ட நாள் 29 April 2016.
  2. 2.0 2.1 2.2 "Surfactants". The Essential Chemical Industry - online. CIEC Promoting Science at the University of York, York, UK. 18 March 2013. பார்க்கப்பட்ட நாள் 29 April 2016.