சோகினி கோஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோகினி கோஷ் ( Shohini Ghosh ) என்பவர் இந்திய பேராசிரியர், கட்டுரையாளர், இயக்குநர் ஆவார். இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏ.ஜே.கே மாஸ் கம்யூனிகேஷன் ரிசர்ச் சென்டரில் சஜ்ஜாத் ஜாஹீர் ஊடகப் பேராசிரியராக உள்ளார். இவர் பரவலர் பண்பாடு குறித்த கட்டுரையாளர் மற்றும் ஆவணப்படப் படைபாளியும் ஆவார். மினசோட்டா பல்கலைக்கழகத்தில் 2007 ஆம் ஆண்டு இவர் கொடுத்த ஒரு நேர்காணலில், இவர் தனது வாழ்க்கை மற்றும் பணி குறித்த தகவல்களை வழங்கினார். [1]

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

சோகினி கோஷ் எம். சி. ஆர். சி. மற்றும் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். மேலும் 1990 முதல் 1996 வரை கோர்னெல் பல்கரைக்கழகத்தில் வருகை தரும் பேராசிரியராக இருந்தார். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சில காலம் தன் காலத்தை செலவிட்டார். மேலும் 1990 களில் பாலியல், பண்பாடு மற்றும் சமூகம் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கற்பித்தல் பணியில் ஈடுபட்டார். [2]

அந்த நேரத்தில் சோகினி கோஷ் தனது ஆவணப் படப் பணியைத் தொடங்கினார். மீடியாஸ்டார்ம் கலெக்டிவ் என்ற பெண்கள் மட்டுமே அடங்கிய ஆவணப்படக் குழுவை இணைந்து நிறுவினார். இது 1992 இல் பெண் ஊடக வல்லுநர்களிடையேயான சிறந்த பணிக்காக சமேலி தேவி ஜெயின் விருதைப் பெற்றது. 1998 இல் இவர் சபீனா காடிஹோக்குடன் திரீ உமன் அண்ட் எ கேமரா படத்தில் பணியாற்றினார். [3]

அண்மைய படைப்புகள்[தொகு]

2002 ஆம் ஆண்டில், சோகினி கோஷ் தனது முதல் சுயாதீன ஆவணப்படமான டேல்ஸ் ஆஃப் தி நைட் ஃபேரிசைத் என்ற படத்தைத் தயாரித்தார். இது ஜீவிகா 2003 இல் சிறந்த திரைப்பட விருதைப் பெற்றது. மேலும் 13 நாடுகளில் காண்பிக்கப்பட்டது. [2] [4] [5]

பாலினம், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் இந்தியாவில் தணிக்கை பற்றிய பல கல்வி சார்ந்த கட்டுரைகளை சோகின் கோஷ் வெளியிட்டுள்ளார். இதில் "Censorship Myths and Imagined Harms" மற்றும் "Looking in Fascination and Horror, Sex Violence and Spectatorship in India" ஆகிய கட்டுரைகள் அடங்கும். [6] ஆர்சனல் பல்ப் பிரஸ் மூலம் வெளியிடப்பட்ட ஃபயர் திரைப்படத்தின் மீதான இவரது மிக அண்மைய தனிக்கட்டுரையானது, இந்தத் துறையை வரையறுக்கும் திரைப்படத்தின் முதல் புத்தக நீள ஆய்வு நூல்களில் ஒன்றாக உள்ளது. [7]

2021 ஆம் ஆண்டில், ஜான் கிரேசனின் சோதனைக் குறும்பட ஆவணப் படமான சர்வதேச டான் கோரஸ் நாளில் கலந்து கொண்டவர்களில் சோகின் கோசும் ஒருவர் ஆவார். [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Minnesota, University of (1 November 2006). "Shohini Ghosh, November 2006".
  2. 2.0 2.1 From her AJK MCRC biography பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம்
  3. "Three Women and a Camera (1998)".
  4. A 74-minute film in Bengali, it premiered in the US in 2003.
  5. The annual Asia Livelihood Documentary festival. See http://jeevika.org.
  6. From an Alternative Law Forum course syllabus.
  7. "Fire: A Queer film classic". Arsenal Pulp Press.
  8. Sarah Jae Leiber, "International Dawn Chorus Day Premieres April 29". Broadway World, March 29, 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகினி_கோஷ்&oldid=3890484" இலிருந்து மீள்விக்கப்பட்டது