சொறித் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது மாலைப் பொழுதில் மறைவிடங்களில் இருந்து வெளி வரும் ஒரு வகைத் தேஎரையாகும். இதன் தோல் சொரசொரப்பாகவும் ஈரமின்றியும் இருக்கும். பின்கால் விரல்களைச் சவ்வு சிறிதே இணைத்திருக்கும். இரண்டு தாடைகளிலும் பற்கள் இராது. முதுகெலும்பின் முன் பக்கத்தில் முள்ளெலும்புகள் குழிவாக இருக்கும். ஆப்பிரிக்காவிலுள்ள் பியூவோ பிராய்ச்சி என்னும் இனத்தீன் தோல் வழவழப்பாக இருக்கும்.

இந்தியச் சொறித்தவளை கண்களுக்குப் பின்னால் இரண்டு நீள் சுரப்பிகளிருந்து ஆல்கலாய்டு நச்சு வெளிவருகிறது. இவற்றின் முக்கிய உணவு பூச்சிகள். எனினும் பியூவோ வல்காரிஸ் என்னும் இனத்தைச் சார்ந்த தவளைகள் சுண்டெலியையும் விழுங்கி விடும். சொறித் தவளைகள் உலகெங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.[1]

  1. அறிவியல் களஞ்சியம்-தொகுதி பதினொன்று பதிப்பு -தமிழ்ப் பல்கலைகழகம் -தஞ்சாவூர் பக்கம்-49
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொறித்_தவளை&oldid=3478961" இலிருந்து மீள்விக்கப்பட்டது