சொப்பு பொம்மைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொப்பு பொம்மைகள்
வேறு பெயர்கள்சொப்பு சாமான்கள்
வகைமர பொம்மைகள்
நாடுஅம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
காலம்18ம் நூற்றாண்டு–தற்போது

சொப்பு பொம்மைகள் என்பது சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் உபகரணங்களை சிறிய அளவில் செய்த விளையாட்டு பொம்மைகளாகும். இதனை சொப்பு சாமான்கள் எனவும் கூறுவர். குழந்தைகள் விளையாடவும், நவராத்திரி திருவிழாவின் போது கொலு வைக்கவும் இந்த பொம்மைகள் உதவுகின்றன.[1]

அம்பை சொப்பு சாமான்கள்[தொகு]

தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கைவினை கலைஞர்களால் 18ஆம் நூற்றாண்டிலிருந்து தயாரிக்கப்படும் சொப்பு சாமான்கள் புகழ் பெற்றவையாகும்.[1] இந்த சொப்பு சாமான்கள் மரத்தால் தயாரிக்கப்பட்டு ஊறு விளைவிக்காத இயற்கை வண்ணங்கள் பூசி விற்கப்படுகின்றன. இந்த பொம்மைகளின் தனித்துவத்திற்காக புவிசார் குறியீடு கோரப்பட்டுள்ளது.[1] அம்பாசமுத்திரத்தில் தயாரிக்கப்படும் சொப்பு பொம்மைகளை அம்பை சொப்பு சாமான்கள் என்று அழைக்கின்றனர்.

தயாரிக்கும் முறை[தொகு]

இந்த சொப்பு பொம்மைகளை மஞ்சள் கடம்பு, தேக்கு, ரோஸ்வுட் மரக்கட்டைகளில் தயாரித்தனர். மஞ்சள் கடம்ப மரங்கள் கிடைப்பது அரிதான பிறகும், தேக்கு ரோஸ்வுட் மரங்களின் விலையுயர்வுக்கு பிறகும் ரப்பர் மரம் மற்றும் யூக்கலிப்டஸ் மரங்கள் பொம்மை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

யூக்கலிப்டஸ் மரத்தண்டு வெண்மையாக இருப்பதாலும் கடைவதற்கு எளிதாக இருப்பதாலும் இவற்றை வெட்டி ஆறு மாதங்களுக்கு முன்பே காயவைத்து விடுகின்றனர். பின்னர் ஒரு அடி நீள கட்டையாக வெட்டி தேவையான அளவு இழைக்கின்றனர். சில பொம்மைகளுக்கு கடசல் முறையை பயன்படுத்துகின்றனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "நெல்லை அம்பாசமுத்திரத்தின் புகழ்பெற்ற சொப்பு சாமான்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு!". News18 Tamil. 28 ஜூலை, 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொப்பு_பொம்மைகள்&oldid=3930330" இலிருந்து மீள்விக்கப்பட்டது