சையது அகமது அஷ்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெளலானா
சையது அகமது அஷ்மி
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
3 ஏப்ரல் 1974 – 2 ஏப்ரல் 1980
பதவியில்
5 சூலை 1980 – 4 சூலை 1986

சையது அகமது அஷ்மி (17 ஜனவரி 1932 - 4 நவம்பர் 2001) ஒரு இந்திய இசுலாமிய அறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் ஜமியத் உலமா-இ-ஹிந்தின் ஏழாவது பொதுச் செயலாளராகவும், பயணிகள் வசதிக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் இரண்டு முறை உத்தரபிரதேசத்தின் சார்பாக இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

சையது அகமது அஷ்மி 1932 ஜனவரி 17 அன்று தர்பங்காவில் தனது தாய்வழி தாத்தாவின் வீட்டில் பிறந்தார். [1] [2] இவர் தனது சகோதரர் சையது முகம்மது அஷ்மியால் வளர்க்கப்பட்டார். இவர் அவரை காஜிபூரில் உள்ள மதரஸா தீனியாவில் சேர்க்கப்பட்டார். அங்கு இவர் 1940 முதல் 1948 வரை தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இவர் 1948 மற்றும் 1954 க்கு இடையில் கொல்கத்தாவில் உள்ள மதரஸா 'அலியாவில் தனது உயர் கல்வியைப் பெற்றார். மேலும், 1955ஆம் ஆண்டில் தாருல் உலூம் தேவ்பந்தில் பட்டம் பெற்றார். [2] [1] அவர் உசைன் அகமது மதானியிடம் ஸஹீஹ் புகாரி மற்றும் ஜாமி அல்-திர்மிதியைப் படித்தார். [1]

அஷ்மி 1957 மற்றும் 1974 ஆண்டுகளுக்கு இடையில் கொல்கத்தாவில் தங்கி, அங்கு அஞ்சுமன் நிடா-இ-இஸ்லாம் மதராசாவில் கற்பித்தார், மேலும் ஜமியத் உலமா-இ-ஹிந்தின் மேற்கு வங்க பிரிவின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். [1] அவர் அங்கு அர்மகன் மற்றும் குந்தன் என்ற இரண்டு வார இதழ்களைத் தொடங்கினார். மேலும், மேற்கு வங்க அரசு அர்மகன் வார இதழுக்கு எதிராக வழக்குத் தொடுத்ததன் விளைவாக, அது நிறுத்தப்பட்டது. [1] [3] இவர் 1974 ஆம் ஆண்டு முதல் 1980 வரை மற்றும் 1980 முதல் 1986 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 1977 ஆம் ஆண்டில் டெல்லி வக்ஃப் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், 1973 முதல் 1980 வரை ஜமியத் உலமா-இ-ஹிந்தின் செயலாளராக பணியாற்றினார். ஜமியத் உலமா-இ-ஹிந்த் இவரை அதன் வாராந்திர அல்-ஜமியத்தின் மேலாளராகவும் ஆக்கியது. இவர் அகில இந்திய முஸ்லீம் மஜ்லிஸ்-இ-முஷாவரத்தின் நிறுவனர் உறுப்பினராக இருந்ததோடு துணைத் தலைவர் பதவியிலும் பணியாற்றினார். இவர் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். [1] பயணிகள் வசதிகள் குழுவின் உறுப்பினராகவும் பின்னர் அதே அமைப்பின் தலைவராகவும் இருந்தார். இவரது வாழ்வின் பிற்பகுதியில், இவர் ஜமியத் உலமா-இ-ஹிந்தில் இருந்து பிரிந்து, மில்லி ஜமியத் உலமாவை உருவாக்கினார், அதன் இருப்பு காகித அளவில் மட்டுமே இருந்தது. [2]

அஷ்மி 4 நவம்பர் 2001 அன்று டெல்லியில் இறந்தார். [1] இவரது இறுதிச் சடங்குக்கு மதரஸா அலியா, ஃபதேபுரியின் மூத்த ஹதீஸ் பேராசிரியராக இருந்த அப்துல் கஃபார் தலைமை தாங்கினார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Amini 2017.
  2. 2.0 2.1 2.2 Muhammad Arif Umari (2 November 2017). "مولانا سید احمد ہاشمی: ناظم عمومی جمعیۃ علماء ہند" (in ur). Millat Times. https://urdu.millattimes.com/archives/20388. 
  3. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha (Indian parliament) website. Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 12 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையது_அகமது_அஷ்மி&oldid=3710826" இலிருந்து மீள்விக்கப்பட்டது