சேர்ப்பு (கணக் கோட்பாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர்ப்பு (union) என்பது இரு கணங்களுக்கு இடையே அமுல்படுத்தக் கூடிய ஒரு செயல்முறை ஆகும். இதை ஒன்றிப்பு என்றும் குறிப்பிடலாம். சேர்ப்பின் போது இரு கணங்களின் உறுப்புகளையும் சேர்த்து புது கணம் ஒன்று உருவாக்கப்படுகிறது. இதன் குறியீடு ∪ ஆகும். இது தர்க்க செயற்பாடு அல்லது (OR) கூட்டலுக்கு இணையானது.
இரண்டு கணங்களைக் "கூட்ட" முடியும். A இனதும் B இனதும் ஒன்றிப்பு A U B என்பதால் குறிக்கப்படும். இதுவே A அல்லது B இன் உறுப்புக்களாக இருந்த எல்லாப் பொருட்களையும் கொண்ட கணமாகும்.
எடுத்துக்காட்டுகள்:
-
- {1, 2} U {red, white} = {1, 2, சிவப்பு, வெள்ளை}
- {1, 2, green} U {சிவப்பு, வெள்ளை, பச்சை} = {1, 2, சிவப்பு, வெள்ளை, பச்சை}
- {1, 2} U {1, 2} = {1, 2}
ஒன்றிப்பின் சில அடிப்படை இயல்புகள்:
-
- A U B = B U A
- A is a subset of A U B
- A U A = A
- A U ø = A