சேத்தன் பாபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேத்தன் பாபூர் (Chetan Baboor) என்பவர் ஓர் இந்திய மேசைப் பந்தாட்ட வீர்ர் ஆவார். இவர் 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் அனைத்துலக மேசைப் பந்தாட்ட சாம்பியனாக சேதன் பாபூர் கருதப்படுகிறார்[1]. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்காக இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான அருச்சுனா விருது 1997 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் கர்நாடகாவிலுள்ள ஓலெனராசிபுராவின் பாபுர் காம்மி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். நான்கு முறை தேசிய சாம்பியன் என்ற தலைப்புப் பட்டத்தையும், பொதுநலவாய சாம்பியன் பட்ட மேசைப் பந்தாட்ட போட்டிகளில் இரண்டு முறை தங்கப் பதக்கத்தையும் சேத்தன் வென்றிருக்கிறார். சேத்தன் இந்தியாவின் லக்னோ நகரில் பிறந்தவர் என்றாலும் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பெட்ரோலியம் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுவீடனின் நிறுவனம் ஒன்று என அவற்றின் பிரதிநிதியாக விளையாடினர். தன்னுடைய விளையாட்டு சாதனைகளைத் தவிர இராத்திரிய வித்யாலயா பொறியியல் கல்லூரியிலிருந்து ஓர் இயந்திரவியல் பொறியாளர் பட்டத்தையும் மற்றும் தண்டர்பேர்ட் குளோபல் மேலாண்மை நிறுவனத்திலிருந்து ஒரு முதுகலை வணிக நிர்வாகப் பட்டமும் பெற்றவராக உள்ளார்.

தன்னுடைய முதுகலை வணிக நிர்வாகப் படிப்பை முன்னிட்டு சேத்தன் தன்னுடைய 27 ஆவது வயதில் மேசைப்பந்து விளையாடுவதை நிறுத்தினார். அப்போதிலிருந்து வணிகவியல் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். 1999 ஆம் ஆண்டு உலகத் தரவரிசையில் 68 ஆவது இடத்தில் இருந்ததே மேசைப் பந்தாட்ட்த்தில் இவரது சிறந்த சாதனையாக இருந்து வருகிறது. 2004 ஆம் ஆண்டு இவர் உலகச் சாம்பியன் பட்டப் போட்டியில் கலந்து கொண்டதும் சிறப்பான சாதனையாகவே கருதப்படுகிறது.

பெங்களுரு/நியூயார்க் நகரங்களில் இவர் தற்போது வசித்து வருகிறார். ஆசிய விளையாட்டுகளின் தொகுப்பாளராக தொலைக்காட்சியில் பணிபுரிகிறார். இவை தவிர ஆக்சுடிரியா இங்க் என்ற ஒரு நிறுவனத்தில் முதல்வராகவும் பணியில் நீடிக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chetan Baboor top-ranked player". இந்தியன் எக்சுபிரசு. 5 June 2009. பார்க்கப்பட்ட நாள் 14 May 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்தன்_பாபூர்&oldid=3266944" இலிருந்து மீள்விக்கப்பட்டது