சேது லெக்குமிபாய் அரசு மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேது லெக்குமிபாய் அரசு மேல்நிலைப் பள்ளி (சுருக்கமாக எஸ். எல். பி. அரசு மேல்நிலைப் பள்ளி) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளி ஆகும்.

வரலாறு[தொகு]

இப்பள்ளி கட்டடம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டிடக் கலைக்கும் சான்றாக திகழ்கிறது. 1860ம் ஆண்டில் அகஸ்தீஸ்வரம் தாலுகா பள்ளிக்கூடம் என்னும் பெயரில் சுசீந்திரம் அருகில் உள்ள ஆஸ்ரமத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து கோட்டாறு அரசு மகளிர் பள்ளியில் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ராஜா சித்திரை திருநாள் பாலராமவர்மாவின் பிரதிநிதியாக ஆட்சி நடத்திய சேது இலக்குமிபாய் மகாராணியாக இருந்தபோது இக்கட்டிடம் உருவானது. 28.11.1928 ஆம் ஆண்டு முதல் இக்கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இப்பள்ளி, 1978ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது.

பள்ளியின் நிலை[தொகு]

இப்பள்ளி 18 ஏக்கர் 42 சென்ட் பரப்பளவிலான இடத்தைக் கொண்டதாக உள்ளது. ஆங்கில எழுத்தான ‘E’ வடிவில் காட்சியளிக்கும் இந்த கட்டிடம் தொன்மையான பல வரலாறுகளின் சாட்சியாக உள்ளது. எஸ். எல். பி. அரசுப் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. 2017 ஆண்டு நிலவரப்படி இப்பள்ளியில் 1,671 மாணவர்கள், 56 ஆசிரியர்கள். 7 அலுவலக பணியாளர்கள், கூடுதலாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சில ஆசிரியர்களோடு இப்பள்ளி இயங்கி வருகிறது.

நூலகம்[தொகு]

எஸ்.எல்.பி. பள்ளியின் நூலகத்தில் மொத்தம் 16,855 புத்தகங்கள் உள்ளன. இதில் 18ம் நூற்றாண்டில் வெளிவந்த புத்தகங்களும் அடங்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. என். சுவாமிநாதன் (24 சூலை 2017). "ஸ்மார்ட் வகுப்பறை, கணினி அறை, சுகாதார வளாகம்: அசத்தும் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2017.