சென்னாக்கூனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னாக்கூனி கடின ஓட்டு கணுக்காலி வகையைச் சேர்ந்த இறாலைப் போன்று வளைந்த உடலை உடையது. உணர் கொம்புகள் கால்கள் போன்ற தொங்கு உறுப்புகள் இறாலில் போன்று உள்ளன. இது 2.5 செ.மீ நீளமே உள்ளதால் சிற்றிறால் என்பர்.

வாழ்விடம்[தொகு]

அப்செட்டிஸ் ஏன்னும் இனம் இந்தியாவின் கிழக்கு கரை, மியான்மர், மலேய தீவு கூட்டம் ஆகியவற்றின் மேற்குக் கரைப் பகுதிகளில் மிகுதியாக கிடைக்கிறது. இவை கடலில் வாழும் மிதவை நுண்ணுயிர்களை உண்டு வாழ்கிறது. இதை சிறு மீன்கள் உண்கின்றன.

இனப்பெருக்கம்[தொகு]

ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் ஆயிரக்கணக்கான முட்டைகள் இடப்படுகின்றன. ஏப்ரல் - ஜூலை மாதங்களில் இள உயிரிகள் வளர்த்து செப்-அக்டோ மாதங்களில் முதிர்ச்சி நிலை அடைகின்றன. நவம்பர் - பிப் மாதங்களில் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது

உணவு[தொகு]

சென்னாக்கூனி புரதம் மிகுந்த உணவாகும். இதனை உலர்த்தியும் பயன்படுத்தலாம்[1]

  1. அறிவியல் களஞ்சியம் -- தஞ்சை பல்கலைக்கழகம் -- தொகுதி --10
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னாக்கூனி&oldid=3639459" இலிருந்து மீள்விக்கப்பட்டது