செங்கல் தேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கல் தேரி (Chengaltheri or Sengaltheri) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஒரு வனப்பகுதி ஆகும். [1] இந்த இடம் களக்காட்டிலிருந்து மேற்கில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள செங்கல் தேரியை செங்குத்தான மலைப்பகுதியில் குறுகிய சாலைகளை கடந்து சென்றால் அடையலாம். செங்கல் தேரி ஒரு சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. பல அருவிகளும் நீரோடைகளும் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிக அளவில் வருகின்றனர். செப்டம்பர் முதல் மார்ச்சு மாதம் வரையிலான காலம் செங்கல்சேரிக்கு செல்வதற்கு உகந்த காலமாகும்.[2]

இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக மரத்தாலான விடுதி, அருங்காட்சியகம், நூலகம் மற்றும் மிருகங்களைப் பார்க்க பார்வை மாடங்கள் உள்ளன.

9-வது கி.மீ தொலைவில் முதலிருப்பான் அருவி நீரோடைகள் உள்ளன. முதலிருப்பான் அருகே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் யானைக்குழி உள்ளது. இங்கு யானைகள் கூட்டமாக காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. மலர், மாலை (2022-08-10). "களக்காடு செங்கல்தேரி மலையில் மர்ம நபர்கள் ஊடுருவல்- சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-23.
  2. "கருவூலம்:திருநெல்வேலி மாவட்டம்! அருவிகள்!". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/jul/21/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2964213.html. பார்த்த நாள்: 23 May 2023. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கல்_தேரி&oldid=3722214" இலிருந்து மீள்விக்கப்பட்டது