சூழல் முத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூழல் முத்திரை
Ecomark
சூழல் முத்திரை இலட்சினை
சான்றளிக்கும் நிறுவனம்இந்திய தர நிர்ணய அமைவனம்
நடைமுறையிலுள்ள இடம்இந்தியா
நடைமுறைக்கு வந்த நாள்1991
வகை17
தர வகைதர முத்திரை
சட்டத் தகுதிநிலைஆலோசனை

 

சூழல் முத்திரை (Ecomark)[1] அல்லது ஈகோமார்க் (Eco mark)[2] என்பது இந்தியத் தர நிர்ணய அமைவனம்[3] (இந்தியாவின் தேசிய தரநிலை அமைப்பு ) மூலம் சுற்றுச்சூழல் அமைப்பில் குறைந்தபட்ச தாக்கத்தை நோக்கமாகக் கொண்ட தரநிலைகளின் தொகுப்பிற்கு இணங்கக்கூடிய தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ் ஆகும்.[1][2][4][5][6] இந்த முத்திரையிடும் திட்டம் 1991-ல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலின் பாதிப்பைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வை நுகர்வோர் மத்தியில் அதிகரிப்பது இந்த முத்திரையின் நோக்கங்களில் ஒன்றாகும். பல்வேறு தயாரிப்பு வகைகளுக்குச் சூழல் முத்திரை குறி வழங்கப்படுகிறது. மேலும் தயாரிப்புகளுக்கான தரநிலைகளை மேம்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளுக்குச் சுற்றுச்சூழல் முத்திரையிடும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. சூழல் முத்திரை திட்டம் 1991-ல் ஜி. எசு. ஆர். 85(ஈ)[7] தேதி 21.02.1991-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், சோப்புகள் மற்றும் சவர்க்காரம், பாந்து, உணவுப் பொருட்கள், மசகு எண்ணெய்கள்[9], பொதிப் பொருட்கள்/பொதி, கட்டிடக்கலை வண்ணப்பூச்சுகள் மற்றும் தூள் பூச்சுகள், மின்கலங்கள் போன்ற 17 தயாரிப்பு வகைகளுக்கான இறுதி அளவுகோல்களை இந்திய அரசு அறிவித்துள்ளது. இதில் மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், உணவு சேர்க்கைகள், மர மாற்றீடுகள், அழகுசாதனப் பொருட்கள், வாயுத்தொங்கல்கள் மற்றும் உந்துசக்திகள், நெகிழிப் பொருட்கள், ஜவுளி, தீயை அணைக்கும் கருவி, தோல் மற்றும் தேங்காய் மற்றும் தென்னை நார் பொருட்கள் அடங்கும்.[7] [8][9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 M P Pollution Control Board. 'ECOMARK'.
  2. 2.0 2.1 "India Chronicle. Monthly E-newsletter of Indian Embassy at Moscow. October 2009". Archived from the original on 2012-01-21. பார்க்கப்பட்ட நாள் 2012-01-07.
  3. Bureau of Indian Standards. 'Other Product Certification Schemes'.
  4. "Indian Institute of Materials Management. 'Eco-Friendly Packaging & Eco-Mark on Packages'". Archived from the original on 2012-01-06. பார்க்கப்பட்ட நாள் 2012-01-07.
  5. Ecolabel Index. 'Ecomark: India'.
  6. Bureau of Indian Standards. 'Specification For Baby Toilet Soap'.
  7. http://extwprlegs1.fao.org/docs/pdf/ind10941.pdf
  8. https://cpcb.nic.in/eco-scheme/
  9. https://www.ppac.gov.in/WriteReadData/userfiles/file/Govt_Link39.pdf
  10. http://www.ccriindia.org/pdf/Ecomark.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழல்_முத்திரை&oldid=3772796" இலிருந்து மீள்விக்கப்பட்டது