சூப்பர் போல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூப்பர் போல் வென்ற அணி வின்ஸ் லொம்பார்டி கிண்ணத்தை பெறும்
சூப்பர் போல் (Super Bowl) என்பது என்.எஃப்.எல். அமெரிக்கக் காற்பந்தாட்டச் சங்கத்தின் ஆண்டுதோறும் நடைபெறுகிற இறுதிப்போட்டியாகும். இதில் என்.எஃப்.எல். சங்கத்தின் இரு கூட்டங்களையும் வென்ற அணிகள் மோதுகின்றன. பொதுவாக ஜனவரி மாதத்தின் கடைசி வாரம் அல்லது பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தின் ஞாயிறுக்கிழமை நடைபெறும். முதல் சூப்பர் போல் ஜனவரி 15, 1967 அன்று விளையாடப்பட்டது.
இப்போட்டியும் தொடர்பான கொண்டாட்டங்களும் சேர்ந்து சூப்பர் போல் ஞாயிறு (Super Bowl Sunday) என்று அழைக்கப்பட்டன. ஆண்டுதோறும் அமெரிக்காவில் சூப்பர் போல் மிகவும் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இன்றைய நாள் நன்றி தெரிவித்தல் நாள் தவிர அமெரிக்கர்கள் கூடுதலாக சாப்பிடுகின்றனர். இதனால் இந்த நாள் நடப்பின் படி தேசிய விழா என்று குறிப்பிட்டது.