சூன் (இசைகேளி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூன் என்னும் ஆங்கில மாதத்திற்கு ஜூன் ஐ சொடுக்கவும்.
சூன் (Zune) என்பது மைக்ரோசாப்டின் கைஅடக்கமான இசைகேளி ஆகும். இதிலும் ஐப்பாடை போல் பாடல்கள், ஒளிப்படங்கள், திரைப்படங்கள், ஆகியனவை பார்க்க உபயோகிக்க முடியும். இதற்கும் மேலாக, இதில் வானொலி வசதியும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒய்-ஃபை வசதியுடன் இரண்டு சூன் கருவியை இணையாகவும் ("pair") செய்துகொள்ள முடியும். அவ்வாறு செய்யப்பட்ட கருவிகள் தங்களுக்குள்ளே பாடல்கள் மற்றும் படங்களை மாற்றிக்கொள்ள முடியும்.
கிடைக்கும் இடம் [தொகு]
தற்சமயம் அமெரிக்காவிலும் கனடாவிலும் மட்டுமே கிடைக்கும் இந்த கருவி, நவம்பர் 19 2006 இல் அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்பட்டது. பின்பு 2008 இல் கனடாவில் வெளியானது.