சுவர்ணபிரபாச சூத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவர்ணபிரபாச சூத்திரம்(金光明經; சீனம்: jin1 guang1 ming2 jing1; ஜப்பானியம்: Konkōmyō Kyō; தேவநாகரி: सुवर्णप्रभास सूत्रं) என்பது ஒரு மகாயான சூத்திரம் ஆகும். இது இந்தியாவில் எழுதப்பட்ட பௌத்த சூத்திரம் ஆகும். இந்நூல் பல முறை சீன மொழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் தற்காலத்தில் இந்த சூத்திரம் சீனாவில் வழக்கில் இல்லை. எனினும் சீனாவில் மூலமாக ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சூத்திரம் ஜப்பானில் மிகவும் முக்கியமான மகாயான சூத்திரங்களுள் ஒன்றாக ஆகிவிட்டது. இந்த சூத்திரத்தில் சதுர்மகாராஜாக்கள் நாட்டை நன்முறையில் ஆளும் அரசனை காப்பதாக கூறப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்த சூத்திரம் நட்டை காப்பதற்காக பொது இடங்களில் பாராயனம் செய்யப்பட்டது. முதன் முதலில் இந்த சூத்திரம் கி.பி 660 ஆண்டில் அரசவையில் பாராயனம் செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் சீனாவும் கொரியாவும் ஜப்பானுக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டன.

கி.பி 741 இல் ஷோமு சக்கரவர்த்தி நாடு முழுவதும் பல பௌத்த மடங்களை நிறுவினார். அங்கு வசித்த 20 துறவிகளும் நாட்டை காப்பாதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த சூத்திரத்தை பாராயனம் செய்தனர். ஜப்பானில் சரஸ்வதியின் வழிபாடு இந்த சூத்திரத்தில் மூலமாக பரவியதாக கருதப்படுகிறது. இந்த சூத்திரத்தில் சரஸ்வதிக்கு ஒரு பிரத்யேக பகுதி உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்ணபிரபாச_சூத்திரம்&oldid=2761442" இலிருந்து மீள்விக்கப்பட்டது