சுயநிதிக் கல்லூரி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தனியார் அறக்கட்டளைகள், சமூக அமைப்புகள், சங்கங்கள் போன்றவை அரசின் அனுமதியைப் பெற்று நடத்தும் கல்லூரிகள் சுயநிதிக் கல்லூரிகள் என்றழைக்கப்படுகின்றன. இந்த சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் கல்லூரியை நிர்வகிக்கும் அமைப்புகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு கல்வி அளிக்கின்றன. இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகளை அந்தக் கல்லூரி இணைக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழகம் நடத்தி தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டங்களை வழங்குகின்றன. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் என பல சுயநிதிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுயநிதிக் கல்லூரிகளில் சில கல்லூரிகள் சிறுபான்மையினர் கல்லூரிகளாகச் செயல்பட்டு வருகின்றன.


வெளி இணைப்பு[தொகு]