சுபிக்ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபிக்‌ஷா
நிறுவுகைசென்னை, இந்தியா (1997)
அமைவிட எண்ணிக்கை1600 கடைகள்
முதன்மை நபர்கள்சுபேந்து தாஸ்
தொழில்துறைவிற்பனை
பணியாளர்25,000
இணையத்தளம்www.subhiksha.in (defunct)

சுபிக்‌ஷா ஒரு இந்திய சங்கிலித் தொடர் சில்லறை விற்பனை கடைகள் ஆகும். இது 1600 விற்பனை நிலையங்களை கொண்டு இயங்கி வந்தது. மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், மருந்துகள் மற்றும் தொலைப்பேசிகளும் விற்பனை செய்து வந்தது. இது 1997 இல் செயல்படத் தொடங்கியது, 2009 ஆம் ஆண்டில் நிதி முறைகேடு மற்றும் கடுமையான பண நெருக்கடி காரணமாக மூடப்பட்டது.

ஆர் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனம் முன்னர் விஸ்வபிரியா நிதி சேவைகள் மற்றும் பத்திரங்கள் லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. நிலையான வைப்புத்தொகை மற்றும் கடன் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ஆர் சுப்பிரமணியன் பொதுமக்களிடமிருந்து பணம் சேகரித்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். தனது படிப்புக்குப் பிறகு சிட்டி வங்கியில் சேர்ந்தார், ஆனால் 15 நாட்களுக்குள் விலகினார். பின்னர் அவர் ராயல் என்ஃபீல்டில் சேர்ந்தார், ஆனால் தனது சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விலகினார். அவரது முதல் முயற்சி விஸ்வபிரியா என்ற பெயரில் நிதி சேவை மையத்தை நிறுவினார். இந்நிதி நிறுவனத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியின் மூலம் சுபிக்ஷா என்ற சங்கித்தொடர் சில்லறை வணிக கடைகளை தொடங்கினார்.

பெப்ரவரி 11, 2009 இல் இந்த நிறுவனம் தனது 1500 கிளைகளை மே 2009 இல் சேவைகளை நிறுத்தப் போவதாக அறிவித்தது.[1]

சான்றுகள்[தொகு]

  1. Reporter, B. S. (19 September 2015). "From Subhiksha to Viswapriya: Subramanian's fall from grace". Business Standard India. பார்க்கப்பட்ட நாள் 7 October 2018.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபிக்ஷா&oldid=2909310" இலிருந்து மீள்விக்கப்பட்டது