சுதந்திர நாடு (நாளிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுதந்திர நாடு இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1946ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • எம்.ஆர்.எம். அப்துற் றகீம்.

இந்தியாவில் இஸ்லாமிய எழுத்தாளர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்கதோர் எழுத்தாளராகவும், பன்னூலாசிரியராகவும் விளங்கியவர்.

துணையாசிரியர்[தொகு]

  • நாவலர் நெடுஞ்செழியன்.

இவர் இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சராக பணியாற்றியவர்.

போக்கு[தொகு]

இந்தியாவின் சுதந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நாளிதழ் நடுநிலைமை செய்திகளை முன்வைத்ததினூடாக மக்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றிருந்தது. இதில் தரமான ஆக்கங்களும், சுதந்திரத்தையொட்டி மக்களை விழிப்புணர்வூட்டும் கட்டுரைகளும் கூடியளவில் இடம்பெற்றுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதந்திர_நாடு_(நாளிதழ்)&oldid=1250065" இலிருந்து மீள்விக்கப்பட்டது