சுட்டாசீ பாவெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுட்டாசீ பாவெல் (Stacie Powell) (பிறப்பு: 18 திசம்பர் 1985) ஒரு பிரித்தானிய வானியலாளரும் நீச்சல்காரரும் ஆவார். இவர் தன் நாட்டின் சார்பில் 2008 இல் பீகிங்கில் நடந்த கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 10மீ நீச்சல் போட்டியில் கலந்துகொண்டார். இவர் 2012 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 10மீ நீச்சல்போட்டியில் கலந்துகொண்டார்.[1][2] இவர் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்தில் முதுபட்டம் படிக்கும்போது FU ஓரியானிசு பற்ரி ஆய்வு மேற்கொண்டார்.[3] சவுதாம்ப்டன் பலகலைக்கழகத்தில் இளவல் பட்டம் படிக்கும்போது வெளிநாட்டுக்குச் சென்று ஓராண்டு ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் பணிபுரிந்தார்.

பாவெல் ஆக்சுடெடு பள்ளிக்குச் சென்று தென்சிலேசுவின் வீட்டில் தங்கினார். இவர் 2004 இல் அங்கிருந்து பணிவிலகினார். மீண்டும் 2012 இல் அங்கு வந்து வானியல் படங்கள் எடுத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sports Reference profile". Archived from the original on 2012-12-18. பார்க்கப்பட்ட நாள் 2018-02-06.
  2. "London 2012". Archived from the original on 2012-08-08. பார்க்கப்பட்ட நாள் 2018-02-06.
  3. The Periodic Spectroscopic Variability of FU Orionis-Nasa ADS
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டாசீ_பாவெல்&oldid=3554958" இலிருந்து மீள்விக்கப்பட்டது