சுகுமாரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகுமாரன் (பிறப்பு: ஜூன் 11, 1957; கோவை, இந்தியா) ஒரு தமிழ்க் கவிஞர். விற்பனை பிரதிநிதி,மொழி பெயர்ப்பாளர், பத்திரிக்கையாளர் , தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் என்று பல்வேறு பணிகளில் செயல்படுபவர் சுகுமாரன்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி பட்டம் பெற்ற சுகுமாரன் அடூர் கோபாலகிருஷ்ணனின் சினிமா பற்றிய புத்தகமொன்றை (சினிமா அனுபவம்) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
பொருளடக்கம் |
[தொகு] புத்தகங்கள்
[தொகு] கவிதைத் தொகுப்புகள்
- கோடைக்காலக் குறிப்புகள்(1985)
- பயணியின் சங்கீதங்கள் (1991)
- சிலைகளின் காலம்(2000)
- வாழ்நிலம் (2002)
- பூமியை வாசிக்கும் சிறுமி (2007)
[தொகு] மொழிபெயர்ப்புகள்
- மார்க்சிய அழகியல் - ஒரு முன்னுரை (விமர்சனம் 1985)
- வெட்டவெளி வார்த்தைகள் (கன்னட வசன கவிதைகள் 2000)
- இது தான் என் பெயர் (சக்கரியாவின் மலையாள நாவல் 2001)
- கவிதையின் திசைகள்(உலகக் கவிதைகள் 2001)
- பாப்லோ நெருதா கவிதைகள் (100 கவிதைகளின் மொழிபெயர்ப்பு 2005)
- பெண் வழிகள் (மலையாள பெண்நிலைக் கவிதைகள் 2005)
- மயிலம்மா - போராட்டமே வாழ்க்கை (ஆதிவாசிப் போராளியின் வாழ்க்கை 2006)
- சினிமா அனுபவம் (2006)
- காளி நாடகம் (உண்ணி ஆர். இன் சிறுகதைகள் 2007)
- மதில்கள் (வைக்கம் முகம்மது பஷீரின் நாவல் 2008)
- அரபிக்கடலோரம் (சக்கரியாவின் கட்டுரைகள் 2008)
[தொகு] கட்டுரைகள்
- திசைகளும் தடங்களும் (2003)
- தனிமையின் வழி ( 2007)
- இழந்த பின்னும் இருக்கும் உலகம் (2008)
- வெளிச்சம் தனிமையானது (2008)