சீர் பன்முகத்திண்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளேட்டோவின் சீர்திண்மங்கள்: நான்முக முக்கோணகம்
84 முகங்களுடைய சீர்நாள்மீன் பன்முகி

ஒரு பன்முகத்திண்மத்தின் முகங்கள் எல்லாம் ஒழுங்கு பல்கோணங்களாக இருந்து, அப்பன்முகத்திண்மம் உச்சி-கடப்புத்தன்மை உடையதாகவும் இருந்தால் அப்பன்முகத்திண்மமானது சீர் பன்முகத்திண்மம் அல்லது சீர் பன்முகி (uniform polyhedron) எனப்படும். சீர் பன்முகிகளுக்கு முகங்களும் உச்சிகளும் குவிவாக இருக்க வேண்டியதில்லை. எனவே பல சீர் பன்முகிகள் நாள்மீன் பன்முகிகளாகவும் இருக்கும்.

சீர் பன்முகிகள்,

  • முகம் மற்றும் விளிம்பு-கடப்புத்தன்மை உடையதாக இருந்தால், அவை ஒழுங்கு பன்முகிகள் என்றும்
  • விளிம்பு-கடப்பு கொண்டிருந்து முகம்-கடப்புத்தன்மை இல்லாமல் இருந்தால், "பகுதிஒழுங்கு பன்முகிகள்" (Quasiregular polyhedron) என்றும்
  • முகம் மற்றும் விளிம்பு-கடப்புத்தன்மை இல்லாமல் இருந்தால், அவை "அரைஒழுங்கு பன்முகிகள்" (Semiregular polyhedron) என்றும்

அழைக்கப்படும்.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீர்_பன்முகத்திண்மம்&oldid=3324172" இலிருந்து மீள்விக்கப்பட்டது