சிவ பஞ்சாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவ பஞ்சாசனம் என்பது யாகக் காலங்களில் யாக சாலையில் சிவபெருமானை அமர வைக்க வைக்க உருவாக்கப்படுகின்ற ஆசனமாகும். இதனை பஞ்சாசனம், ஸ்திராசனம் என்றும் அழைக்கின்றனர்.

பெயர்க்காரணம்[தொகு]

பஞ்சாசனம் என்பதனை பஞ்ச ஆசனம் என பிரிக்கலாம். பஞ்ச என்பது ஐந்து என்ற எண்ண குறிப்பதாகும். ஐந்து வகையான ஆசனங்கள் சேர்ந்து சிவ பஞ்சாசனம் உருவாக்கப்படுவதால் பஞ்சாசனம் என்று பெயர்.

கூர்மாசனத்தின் மேல் அனந்தாசனம், சிம்மாசனம், யோகாசனம், பத்மாசனம், விமலாசனம் என ஐந்து ஆசனங்களையும் கொண்டது பஞ்சாசனம்.

ஆசன அமைப்பு[தொகு]

கூர்மாசனம்[தொகு]

பஞ்சானத்தின் முதல் ஆசனமாக இருப்பது ஆதார சக்தியாகும்.[1] ஆதார சக்தியாக ஆமை வடிவம் அமைக்கப்படுகிறது. ஆதார‌சக்தி ஆமை வாகனத்தில் அமர்ந்து, நான்கு கரங்களில் பாசம், அங்குசம், அபய, வரத முத்திரைகளை கொண்டுள்ளார். ஆதார சக்தி வெள்ளை நிறம் கொண்டவாகவும், ஜடாமகுடத்தோடும் உள்ளார்.

அனந்தாசனம்[தொகு]

ஆமையின் மேல் இரண்டாவதாக அமைவது அனந்தாசனமாகும். தொடக்கத்தில் அனந்தன் என்னும் வெண்மையான பாம்பு மூன்று சுற்று மேகலையுடன் அமைக்கப்பட்டது. அதனால் ஆசனத்தினை அனந்தாசனம் என அழைத்தனர். தற்போது அனந்தன், வாசுகி, தக்சகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன் ஆகிய எட்டு நாகங்களை எட்டு திசைகளிலும் அமைக்கின்றனர். அனந்தன் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளார்.

சிம்மாசனம்[தொகு]

அனந்தாசனத்தின் மேல் சிம்மாசனம் அமைகிறது. சிம்மாசனத்தில் எட்டு சிங்கங்கள் எட்டு திசைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிங்கங்கள் தர்மம், ஞானம், வைராக்கியம், ஐஸ்வரியம், அதர்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அனைஸ்வரியம் ஆகியவற்றை குறிப்பதாகும்.


இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_பஞ்சாசனம்&oldid=3698654" இலிருந்து மீள்விக்கப்பட்டது