சிவானா ஆறு

ஆள்கூறுகள்: 19°10′N 72°02′E / 19.167°N 72.033°E / 19.167; 72.033
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவானா ஆறு
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகராட்டிரம்
மண்டலம்மராத்வாடா
மாவட்டம்ஔரங்காபாத்
நகரம்கன்னட்
சிறப்புக்கூறுகள்
மூலம்அஜாந்தா சரகம்
 ⁃ அமைவுகட்டால ஆட்ராம்காட் சரணாலயம், அவுரங்காபாத், ஔரங்காபாத், மகாராட்டிரம், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்20°33′N 75°19′E / 20.550°N 75.317°E / 20.550; 75.317
 ⁃ ஏற்றம்838 m (2,749 அடி)
முகத்துவாரம்கோதாவரி ஆறு
 ⁃ அமைவு
ஜெயாக்வாதி அணை, ஔரங்காபாத், மகாராட்டிரம்
 ⁃ ஆள்கூறுகள்
19°10′N 72°02′E / 19.167°N 72.033°E / 19.167; 72.033
 ⁃ உயர ஏற்றம்
351 m (1,152 அடி)

சிவானா ஆறு (Shivana River) என்பது இந்தியாவின் மகராட்டிரா மாநிலத்தில் ஓடும் கோதாவரி ஆற்றின் முக்கியமான துணை ஆறாகும். இது முழுக்க முழுக்க அவுரங்காபாத் மாவட்டத்தில் ஓடுகிறது.[1] மகாராட்டிரா மாநிலத்தின் கன்னாட் வட்டத்தில் இந்த ஆறு தோன்றுகிறது.[2] அஜந்தா மலைகளின் தென்மேற்கு சரிவில் தோன்றும் இந்த ஆறுடன் மற்றொரு பெரிய துணை ஆறானபூர்ணாவும் தோன்றுகிறது.

தோற்றம்[தொகு]

அஜந்தா மலைகளின் தெற்கு சரிவுகளின் கௌதாலா வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வெளியேறும் நீரோடைகளே இந்த ஆறாகத் தோன்றுகிறது.

ஆற்றோட்டம்[தொகு]

சிவானா ஆறு தோன்றும் இடத்திலிருந்து தென்கிழக்கில் கன்னட் நகரம் வரை குறுகிய ஆறாகப் பாய்கிறது. இங்கு ஆற்றின் குறுக்கே அம்பாடி அணை கட்டப்பட்டுள்ளது.[3] இதன் மூலம் தேக்கிவைக்கப்பட்ட நீரானது மனித நுகர்வுக்குப் பயன்படுகிறது. மேலும் இந்த நீர்த் தேக்கத்தில் பல்வேறு வகையான மீன்கள் நிறைந்து காணப்படுகிறது.  கன்னடத்திலிருந்து, இந்த நதி தென்கிழக்கு திசையில் ஓடுகிறது. சிவனா தக்லி அணை எனப்படும் மற்றொரு அணையும் இதன் பாதையில் கட்டப்பட்டுள்ளது.[4] ஜம்பர்கேடாவை அடைந்ததும், இந்த ஆறு, தன் போக்கினை மாற்றித் தெற்கு நோக்கிக் கேட் பிம்பால்கான் நோக்கிப் பாய்கிறது. இங்கு இது தென்கிழக்கு திசையில் போக்கை மீண்டும் தொடர்கிறது. கோதாவரி ஆற்றின் மீது கட்டப்பட்ட ஜெயக்வாடி அணையினால் உருவாக்கப்பட்ட நாத்சாகர் நீர்த்தேக்கத்தில் இந்த ஆறு கலக்கின்றது. மண்ட்சூர் மாவட்டம் வழியாகச் செல்லும் இந்த ஆறு மழைக்காலத்தில் பசுபதிநாத் கடவுளின் சிலையைத் தொடும்.

அணைகள்[தொகு]

  • அம்பாதி அணை
  • சிவானா தக்லி அணை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". aurangabad.nic.in. Archived from the original on 4 January 2014. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Village Map, Taluka Kannad" (PDF). Maharashtra Remote Sensing Applications Centre. பார்க்கப்பட்ட நாள் 2015-10-13.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Ambadi Dam D01388". WRIS-Water Resources Information of India. பார்க்கப்பட்ட நாள் 2015-10-13.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Shivana Takli Dam D03058". WRIS-Water Resources Information of India. பார்க்கப்பட்ட நாள் 2015-10-13.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவானா_ஆறு&oldid=3584178" இலிருந்து மீள்விக்கப்பட்டது