சிவகாமராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவகாமராயன் கங்க வம்சத்தின் 14வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை கி. பி. 669 என அறுதியிட்டுக் கூறுகிறது. இவர் ராஜகோவிந்தராயனின் தம்பி என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1]

முகுந்த பட்டணம்[தொகு]

கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் முகுந்த பட்டணம்த்தைத் தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், இவன் பல தேச மன்னர்களை வென்றும் அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும் அறியமுடிகிறது.[2]

நிலக்கொடை[தொகு]

சிவகாமராயன் மிகச் சிறந்த தர்மம் செய்பவனாக விளங்கினான். இவன் சாலிவாகன சகம் வருடம் வஸ்துசிரஹபாணயுதம் 591 பிரமோதூத ஸ்ம்வத்ஸரம் 10 மகாமாதம் 10 அன்று விஷ்ணுவினுடைய குமாரன் வாசபேயனுக்கு உரியூர், ஒபளி, ஹளிஹள்ளி ஆகிய நாடுகளை தானம் வழங்கியதாக அறியமுடிகிறது.[3]

சான்றாவணம்[தொகு]

  1. கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  2. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-105)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-
  3. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-105)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954-

ஆதாரங்கள்[தொகு]

  • Kongudesarajakkal , Government manuscript Library, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகாமராயன்&oldid=2388531" இலிருந்து மீள்விக்கப்பட்டது