சிலா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலா கான்
இசை வடிவங்கள்சூபி இசை
தொழில்(கள்)இசைக் கலைஞர், நடிகர்
இசைக்கருவி(கள்)குரலிசைக் கலைஞர்
இணையதளம்Official site

சிலா கான் (Zila Khan) ஒரு இந்திய சூபி பாடகரும், நடிகருமாவார்.[1] இவர் பாரம்பரிய மற்றும் அரைப் பாரம்பரிய இசை வடிவங்களைப் பாடுகிறார் [2] மேலும், இம்தட்கானி கரானாவின் பாரம்பரியத்தில் நிகழ்த்துகிறார். சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி என்றத் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் கௌஹர் போன்ற நாடகங்களிலும் தீவிரமாக நடிக்கிறார். இவர் பாலிவுட் படங்களுக்கும் விளம்பரங்களுக்கும் பின்னணி பாடுகிறார். மேலும், இவர் ஒரு இசையமைப்பாளராகவும் இசை இயக்குனராகவும் இருக்கிறார். இவர் தனது தந்தை உஸ்தாத் விலாயத் கான் பற்றிய ஸ்பிரிட் டூ சோல் என்ற ஆவணப்படத்தையும் தயாரித்து இயக்கியுள்ளார்.[3]

ஆரம்பகால வாழ்க்கையும் தொழிலும்[தொகு]

இவர் புகழ்பெற்ற சித்தார் கலைஞரான உஸ்தாத் விலாயத் கானின் மகளும் முறையான சீடரும் ஆவார். அமீர் குஸ்ராவின் சிலா காபி இராகத்தைக் கொண்டு இவருக்கு இவரது தந்தை இந்தப் பெயரிட்டார்.[4]

இசை பள்ளி[தொகு]

"உஸ்தாத்கா" என்ற அறக்கட்டளையை 2008 ஆம் ஆண்டில் நிறுவினார். இசையில் திறமை வாய்ந்த குழந்தைகளுக்கு கற்பித்தலே இதன் நோக்கமாகும். இந்த அறக்கட்டளை மாணவர்களுக்கு உதவித்தொகைகளையும் வழங்குகிறது. இசை மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை சம்பாதிக்க உதவுகிறது. மேலும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை தேசிய மற்றும் சர்வதேச அளவில் காட்சிப்படுத்துகிறது.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவருக்கு திருமணமாகி பைசன் சேக் கான் என்ற மகன் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hindu : Entertainment Chennai / Music : Moment of musical humanism". Hinduonnet.com. 21 October 2005. Archived from the original on 7 பிப்ரவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 12 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. "Music in the genes". The Hindu. 19 December 2002. Archived from the original on 4 ஜூலை 2003. பார்க்கப்பட்ட நாள் 12 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. https://india.georgetown.edu/events/an-evening-of-mystical-sufi-music-with-zila-khan
  4. https://www.thehindu.com/entertainment/music/zila-khan-seeing-the-one-world-with-two-eyes/article29398583.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலா_கான்&oldid=3929933" இலிருந்து மீள்விக்கப்பட்டது