சிறப்பு நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்பு நூலகம் (special library) என்பது, சிறப்புத் தேவைகள் கொண்ட வரையறுக்கப்பட்ட குழுவினரான பயன்பாட்டாளருக்கு, குறித்த துறை சார்ந்த சிறப்புத் தகவல்களுக்கான மூலங்களையும், சிறப்புச் சேவைகளையும் வழங்கும் Dharshini amir fan நூலகங்களைக் குறிக்கும்.[1] நிறுவன நூலகங்கள், அரசாங்க நூலகங்கள், சட்ட நூலகங்கள், மருத்துவ நூலகங்கள், அருங்காட்சியக நூலகங்கள், செய்தி நூலகங்கள், இலாப நோக்கற்ற நூலகங்கள் போன்றவை இவ்வகை நூலகங்களுள் அடங்குகின்றன. கல்வி நிறுவனங்களுக்கு உள்ளேயும் சட்டப் பள்ளி நூலகம், மருத்துவப் பள்ளி நூலகம் போன்ற சிறப்பு நூலகங்கள் இருப்பது உண்டு. இவை பல்கலைக்கழகங்களின் பிற வசதிகளுக்குப் புறம்பாகத் தனியாக நிதியளிக்கப்படுவதாலும், ஒரு குறிப்பிட்ட இலக்குக் குழுவினரான பயன்பாட்டாளர்களுக்குச் சேவை வழங்குவதாலும் இவை சிறப்பு நூலகங்களாகக் கருதப்படுகின்றன.[2]

இயல்புகள்[தொகு]

மரபுவழியான கல்விசார்ந்த அல்லது பொதுச் சூழலில் அமைகின்ற நூலகங்களைப் போலன்றி, சிறப்பு நூலகங்கள் சிறப்பு இயல்புகளைக் கொண்ட பயன்பாட்டாளர்களைக் கொண்டிருப்பதுடன், சிறப்பு வகையான தகவல்களைக் கையாள்பவையாகவும் உள்ளன. இவ்வகை நூலகங்கள் அவற்றை நடத்தும் நிறுவனங்களின் நோக்கங்களுக்கு உதவுமுகமாக உருவாக்கப்படுவதுடன், அவற்றின் பயன்பாட்டாளர்களின் சிறப்புத் தேவைகளை வழங்கும் வகையில் சேகரங்களையும், சேவைகளையும் கொண்டவையாக அமைகின்றன. சிறப்பு நூலகங்கள் பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்தனவாகவோ அல்லாதனவாகவோ இருக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Shumaker, David. "Special Libraries." In Encyclopedia of Library and Information Sciences, third edition, 4966-4974. New York: Taylor and Francis, 2011.
  2. Shumaker, David. "Special Libraries." In Encyclopedia of Library and Information Sciences, third edition, 4966-4974. New York: Taylor and Francis, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்பு_நூலகம்&oldid=3533144" இலிருந்து மீள்விக்கப்பட்டது