சியாமா பிரசாத்து மண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாமா பிரசாத்து மண்டல்
Shyama Prasad Mandal
பிறப்பு13 சூன் 1940 (1940-06-13) (அகவை 83)
இந்தியா
பணிஎலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்
செயற்பாட்டுக்
காலம்
1965-
அறியப்படுவதுவிளையாட்டு மருத்துவம்
பெற்றோர்கலிபாதா மண்டல் செயந்தி மண்டல்
வாழ்க்கைத்
துணை
ஆனந்திதா மண்டல்
பிள்ளைகள்பிரதிப் மண்டல் அதிப் மண்டல்
விருதுகள்பத்மசிறீ

சியாமா பிரசாத்து மண்டல் (Shyama Prasad Mandal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். புது தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் இணைத் தலைவராக உள்ளார் [1] புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் தனது பட்டம் மற்றும் முதுநிலை மருத்துவப் பட்டங்களைப் பெற்ற பிறகு, [2] இலிவர்பூல் பல்கலைக்கழகத்தில் எலும்பியல் துறையில் பொது அறுவைச்சிகிச்சை பட்டம் பெறுவதற்காக தனது கல்வியைத் தொடர்ந்தார். [3] இந்திய எலும்பியல் சங்கத்தின் முன்னாள் தலைவர் , அதன் கட்டிடக் குழுவின் தலைவர், [4] கல்வி மற்றும் மறுவாழ்வு சேவையில் ஈடுபட்டுள்ள இலாப நோக்கற்ற அமைப்பான அமர்சோதி அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவின் தற்போதைய தலைவர் எனப் பலபொறுப்புகளில் உள்ளார். [5] மருத்துவ மாநாடுகள் நடத்தும் அமைப்பில் ஈடுபடுகிறார். [6] 2008 ஆம் ஆண்டின் முழங்கால் மற்றும் மூட்டு அகநோக்கு சிகிச்சை பட்டறை ஏற்பாட்டுக் குழுவின் இணைத் தலைவராகவும், இந்திய விளையாட்டு மருத்துவ சங்கம்,, இந்திய விளையாட்டு மருத்துவக் கூட்டமைப்பு,, இந்திய மூட்டு அகநோக்கு சங்கம் ஆகியவை இணைந்து 2012 ஆம் ஆண்டு நடத்திய கீழ் மூட்டு கருத்தரங்கின் புரவலராகவும் இருந்தார் [7] [8] 1999 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரின் தொடர்ச்சியான முதுகு காயத்திற்காக அவரை பரிசோதித்தபோது இவர் செய்திகளில் பிரபலமாக இருந்தார். [9] [10] மருத்துவ அறிவியலுக்கான இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2011 ஆம் ஆண்டில் பத்மசிறீ என்ற நான்காவது உயரிய குடிமக்கள் விருதை இவருக்கு வழங்கியது. [11] வங்காளதேச அரசாங்கமும் இவருக்கு சிறந்த குடிமகன் என்ற மரியாதையையும் வழங்கியது. [5] இந்திய எலும்பியல் சங்கம் அவரை கௌரவிக்கும் வகையில் சியாமா பிரசாத்து மண்டல் தங்கப் பதக்கம் என்ற விருதை நிறுவியுள்ளது. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr. S.P. Mandal". Practo. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  2. "S P Mandal on Credi Health". Credi Health. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  3. "Department of Orthopedics". Sir Ganga Ram Hospital. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  4. "Indian Orthopedic Association Newsletter" (PDF). Indian Orthopedic Association. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  5. 5.0 5.1 "Board of Trustees". Amarjyoti Charitable Trust. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  6. 6.0 6.1 "S. P. Mandal Gold Medal" (PDF). Indian Orthopedic Association. 2015. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  7. "Knee and Arthroscopy Workshop" (PDF). Sports Medicine Clinic. 2008. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  8. "Lower Limb Symposia" (PDF). Orthopedic Principles. 2012. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  9. "Back to the wall". India Today. 22 March 1999. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  10. "Has The Colossus Cracked?". Outlook India. 20 September 1999. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  11. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.

புற இணைப்புகள்[தொகு]

  • "Orthopedics". Sir Ganga Ram Hospital, New Delhi. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  • Tessa Koshy (7 May 2006). "Oh My Aching Back !". Feature. The Telegraph. Archived from the original on 20 May 2006. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாமா_பிரசாத்து_மண்டல்&oldid=3770776" இலிருந்து மீள்விக்கப்பட்டது