சிம்லா மஞ்சள் காமாலை நோய்ப்பரவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிம்லா மஞ்சள் காமாலை நோய்ப்பரவல் (Shimla jaundice outbreak ) இந்தியாவின் வட இந்திய நகரமான சிம்லாவில் 2015 ஆம் ஆண்டு திடீரென்று பரவிய மஞ்சள் காமாலை நோய் ஆபத்தைக் குறிக்கிறது.[1] சிம்லா நகரில் 2015 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் மஞ்சள் காமாலை நோய் முதலில் பதிவாகத் தொடங்கியது. [2] 2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாத நிலவரப்படி நோய்ப்பரவல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கழிவுநீர் அசுவானி குத் நீர் திட்டத்தில் கலப்பதால் இந்நோயப் பரவல் மேலும் தீவிரமடைந்தது. [3] அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் மஞ்சள் காமாலை நோயால் 10 பேர் இறந்தனர் மற்றும் 1600 பேர் நோயில் பாதிக்கப்பட்டனர் என்று தெரிவித்தன. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடுகள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000 பேருக்கும் அதிகமானதாகக் கூறின. சிம்லாவில் உள்ள மொத்த குடும்பங்களில் பாதி பேர் இத்தொற்று நோயைக் கொண்டிருந்தனர் என்றும் இத்தகவல் தெரிவித்தது.

சிம்லாவின் நீர்வழங்கல் திட்டத்தில் வழங்கப்பட்ட தண்ணீரில் மஞ்சள் காமாலை ஈ வைரசு கலந்து மாசுபட்டதே இத்திடீர் நோய்ப் பரவலுக்கான காரணமாகும். அசுவானி குத் நதி அமைப்பில் வெளியேற்றப்பட்ட முறையற்ற கழிவுநீரில் இருந்து இந்நோய் உருவானது. மஞ்சள் காமாலை ஈ வைரசு பொதுவாக பாதிக்கப்பட்ட நபர்களின் கல்லீரலைத் தாக்குகிறது, இதனால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. [4] அசுத்தமான நீர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கீழே உள்ள நகரின் நீர் வழங்கல் திட்டத்தில் கலக்கிறது. குளிர்கால மாதங்களில் இந்த பிரச்சினை தீவிரமடைகிறது. குறைந்த மழைப்பொழிவு காரணமாக நீரளவு குறைந்து போவதால் வைரசின் செறிவு அதிகமாகிவிடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bisht, Gaurva (28 February 2016). "Shimla battles worst jaundice outbreak since 1947". Hindustan Times. http://m.hindustantimes.com/india/shimla-battles-worst-jaundice-outbreak-since-1947/story-I3LhFdiCO0TjuYGaYXs8sK.html. 
  2. Sharma, Ashwani (20 February 2016). "Jaundice outbreak in Shimla: 10 dead". The Indian Express. http://indianexpress.com/article/india/india-news-india/jaundice-outbreak-in-shimla-10-dead/. 
  3. Chauhan, Kuldeep (2 March 2016). "Jaundice threat looms due to 'misplaced' STPs". The Tribune. http://www.tribuneindia.com/news/himachal/jaundice-threat-looms-due-to-misplaced-stps/203769.html. 
  4. "Viral Hepatitis". Centers for Disease Control and Prevention. US Department of Health and Human Services. பார்க்கப்பட்ட நாள் 30 March 2016.