சின்னரெட்டிபட்டி ஆவுடைய லிங்கேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்னரெட்டிபட்டி ஆவுடைய லிங்கேஸ்வரர் கோயில் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் மாவட்டத்தில் சின்னரெட்டிப்பட்டியில் அமைந்துள்ள சிவாலயமாகும். [1]

வரலாறு[தொகு]

சிற்றரசர்களில் ஒருவரான குன்னுடையாரும் அவரது மனைவி தாமரை நாச்சியாரும் தவமிருந்து குழந்தை வரம் பெற்றனர்.

கோவில் அமைப்பு[தொகு]

லிங்கேஸ்வரர் கோவில் 300 அடி உயரமும் 276 படிக்கட்டுகளையும் உடைய மலைக் கோவிலாகும். தல விருட்சம் நாவல் மரம். இக்கோவிலுள்ள வற்றாத சுனையில் பசுவின் கால்தடம் பதிந்துள்ளது.

பூசைகள்[தொகு]

  • இரண்டுகால பூஜைகள்
  • பிரதோஷ வழிபாடு
  • பெளர்ணமி பூஜை
  • சிவராத்திரி பூஜை
  • அமாவாசை பூஜை

ஆகிய பூசைகள் பழமையான முறையில் தமிழ் திருமுறை பாடல்களால் அபிசேகம் நடைபெற்று வருகிறது.

உயிர்களின் வழிபாடு[தொகு]

இக்கோவிலில் ஆடு, மாடு, தேவாங்கு, பாம்பு, தேள், அணில் முதலான உயிரினங்கள் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.

புல் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று சுயம்பு லிங்கத்திற்கு நிழல் கொடுக்கும் பொருட்டு அசையாமல் நின்றதால் இறைவன் பசுவிற்கு காட்சி கொடுத்ததாக செவிவழிச் செய்தி கூறப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "கரூர் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு". www.dailythanthi.com. 16 செப்., 2020. {{cite web}}: Check date values in: |date= (help)