சிடெரோகெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிடெரோகெல் (Siderogel) என்பது இரும்பு(III) ஆக்சைடு-ஐதராக்சைடு (FeO(OH)) என்ற வேதிச் சேர்மத்தைக் கொண்டுள்ள ஒரு புறவேற்றுமை வடிவ கனிமப்போலியாகும். லைமோனைட்டு, கோயீத்தைட்டு போன்று அதே வேதிச் சேர்மத்தைப் பெற்று;[1] அல்லது அதே FeO(OH)•nH2O என்ற பொதுவாய்ப்பாட்டில் அமைந்த ஒரு நீரேற்றாக இது இருக்கலாம்[2].

கருப்பு, பழுப்பு, அல்லது செம்-பழுப்பு நிறத்துடன் பெரும்பாலும் கண்ணாடி போல ஒளிகசியும் கனிமமாக இது விவரிக்கப்படுகிறது[3]. சல்பைடு தாதுக்களின் காலநிலை மாற்றம் மற்றும் ஆக்சிசனேற்ற விளைவால் தோன்றிய கோசான் வகை கனிமங்கட்டியாகவும் இது இருக்கலாம்[4]. சிடெரோகெல் ஒரு கனிம வகையென்று அனைத்துலக கனிமவியல் நிறுவனம் அதிகாரப்புர்வமாக அங்கீகரிக்கவில்லை[5].

தோற்றம்[தொகு]

காவா மற்றும் புரூகர்சு, காத்தலோனியா தளங்கள் உட்பட ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் ஒரு சில இடங்களில் சிடெரோகெல் கிடைப்பதாக பதிவாகியுள்ளது;[1].

கோடோசு, அரகோன் சுரங்கத்திலும்;[6], செருமனியின் மெண்டனுக்கும் எமருக்கும் இடையிலுள்ள பெக்கி ஒயிசு சுரங்கத்திலும்;[3], சீனாவின் கெய்ச்சு மாகாணம் காசோங் படிவுகளிலும் கூட சிடெரோகெல் கிடைப்பதாக கூறப்படுகிறது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Eugeni Bareche (2006): Els minerals de Catalunya, segle XX (in Catalan language). Grup Mineralògic Català. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-609-9071-0.
  2. Sven Köhler (2004): Auswahl und Einsatz von eisenhaltigen Füllmaterialien für permeable reaktive Barrieren (PRB) zur In-situ-Grundwassersanierung am Beispiel eines Chromatschadenfalles, page 39. Volume 222 of Veröffentlichungen des Instituts für Geotechnik, ETH Zürich; 227 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783728129536
  3. 3.0 3.1 Siderogel. MinDat minerals database. Accessed on 2019-02-14.
  4. 4.0 4.1 Jingwen Mao, Xiangkun Zhu, Yue Wang (2015), "Iron isotope fractionation during supergene weathering process and its application to constrain ore genesis in Gaosong deposit, Gejiu district, SW China". Gondwana Research, volume 27, issue 3, pages 1283-1291. எஆசு:10.1016/j.gr.2013.12.006
  5. IMA (2018): "The New IMA List of Minerals பரணிடப்பட்டது 2019-03-23 at the வந்தவழி இயந்திரம்", version of November 2018. Accessed on 2019-02-14.
  6. Emilio Romero (2017): Patrimonio Geológico y Minero: Una apuesta por el desarrollo local sostenible, page 260 (in Spanish). Universidad de Huelva, 100 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788416872541
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடெரோகெல்&oldid=3367306" இலிருந்து மீள்விக்கப்பட்டது