சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
US Locator Blank.svg
அமைவிடம் ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவிலும், நெவாடாவிலும்
கிட்டிய நகரம் பீட்டி, நெவாடா
ஆள்கூறுகள் 36°14′31″N 116°49′33″W / 36.24194, -116.82583அமைவு: 36°14′31″N 116°49′33″W / 36.24194, -116.82583
பரப்பளவு 5,270 ச மைல் (13 கிமீ2)
5,194 ச மைல் (13 கிமீ2) federal [1]
நிறுவப்பட்டது பெப்ரவரி 11, 1933 (நினைவுச்சின்னம்)
அக்டோபர் 31, 1994 (தேசியப் பூங்கா)
வருகை 828,574 (in 2009) [2]
நிருவாகம் தேசிய பூங்கா சேவைகள்

சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (Death Valley National Park) என்பது சியெரா நெவேடாவுக்குக் கிழக்கே வரண்ட காலநிலையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் பெரும் வடிநிலத்தில் (Great Basin) அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். இப் பூங்காவின் பகுதிகள் கிழக்குக் கலிபோர்னியாவில் உள்ள இன்யோ கவுன்டியின் தெற்குப் பகுதியிலும், சான் பேர்னாடினோ கவுன்டியின் வடக்குப் பகுதியிலும் உள்ளன. இப் பூங்காவின் சிறிய பகுதிகள், நியே கவுன்டியின் தென்மேற்குப் பகுதியிலும், நெவாடாவில் உள்ள எசுமெரால்டா கவுன்டியின் தெற்குக் கோடியிலும் அமைந்துள்ளன. இவைதவிரப் பூங்காவின் தனித்த பகுதியொன்று (பேய்க் குழி) தெற்கு நியே கவுன்டியினுள் அமைந்துள்ளது. 13,630 கிலோ மீட்டர்கள் (5,262 சதுர மைல்) பரப்பளவு கொண்ட இப் பூங்கா, உப்புப் பள்ளத்தாக்கு (Saline Valley), பனாமின்ட் பள்ளத்தாக்கின் (Panamint Valley) பெரும்பகுதி, ஏறத்தாள முழுமையான சாவுப் பள்ளத்தாக்கு, பல மலைத் தொடர்களின் பகுதிகள் என்பவற்றைத் தன்னுள் அடக்கியுள்ளது.


[தொகு] குறிப்புகள்

  1. "Listing of acreage as of 12/31/2010". Public Use Statistic Office, National Park Service.
  2. "Five Year Annual Recreation Visits Report". Public Use Statistic Office, National Park Service.
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்