சாவானா மில் படுகொலைப் பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாவானா மில் படுகொலைப் பாட்டு என்பது நாட்டார் கதைப்பாடல்களின் ஒரு வகையான கொலைச் சிந்தினைச் சேர்ந்தது. புதுவையில் பிரான்ஸ் அரசு தொழிலாளர்களின் போராட்டதை அடக்க துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை பாரதிதாசன் எழுதியுள்ளார். [1]

நிகழ்வு[தொகு]

19-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸ் அரசு புதுவையில் பெரிய பஞ்சாலையைத் தொடங்கியது. அதற்கு சாவானா டெக்ஸ்டைல்ஸ் மில் என பெயரிடப்பட்டது. அக்காலத்தில் ஆசிய நாடுகளிலேயே பெரிய பஞ்சாலைகளாகச் சென்னை பக்கிங்ஹாம் கர்நாட்டிக் மில்லும் புதுவை சாவானா டெக்ஸ்டைல்ஸ் மில்லும் விளங்கின.

1900-லிருந்து 1935 வரை சாவானா மில்லில் தொழிலாளர் சங்கம் இல்லை. தொழிலாளர்கள் தங்களுடைய தேவைகளை மேலதிகாரிகளுக்கு கூற ஒன்றிணைந்து சிறுசிறு போராட்டம் செய்து வந்தனர். ரேடியர் மில்லில் தொடங்கிய சம்பளப் போராட்டம், 1935-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் தேதியில், 10 மணிநேர வேலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துப் போராடத் தொடங்கினர்.

மக்கள் தலைவர் வ. சுப்பையா ஜூலை மாத கடைசி வாரத்தில் மூன்று தொழிற்சாலை தொழிலாளிகளையும் இணைத்துப் போராடினார். அப்போதைய புதுவை பிரான்சு அரசு போராடும் தொழிலாளிகள் மீது இராணுவத்தினரைக் கொண்டு சுட்டது. இந்த தாக்குதலில் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

கொலைச் சிந்து[தொகு]

1936-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தொழிலாளர்களை மையமாக கொண்டு புதுவைக் கவிஞர் பாரதிதாசன் கொலைச் சிந்து பாடினார்.


ஆதாரங்கள்[தொகு]

  1. http://m.tamil.thehindu.com/general/literature/சாவானா-மில்-படுகொலைப்-பாட்டு/article6515351.ece[தொடர்பிழந்த இணைப்பு]