சாரீரப்பதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வளிமண்டல ஈரப்பதனை அளக்கும் ஈரப்பதன் மானி(Hygrometer).

சாரீரப்பதன்( Relative Humidity) எனப்படுவது வளிமண்டலத்தில் காணப்படும் நீராவியின் அளவிற்கும் நிரம்பிய நிலை நீராவியளவிற்கும் இடையயிலான விகிதமாகும்.

பொருளடக்கம்

[தொகு] வரைவிலக்கணம்

நீர்- வளி கொண்டகலவை ஒன்றின் சாரீரப்பதன் \left(\phi\right) எனப்படுவது, குறித்த வெப்பநிலையில் அக்கலவையிலுள்ள நீராவியின் பகுதி அமுக்கத்திற்கும் \left({e_w}\right) நீராவியின் நிரம்பல் ஆவியமுக்கத்திற்கும் \left({{e^*}_w}\right) இடையிலான விகிதம் ஆகும்.

பின்வரும் சமன்பாட்டின் மூலம் சாரீரப்பதன் கணிக்கப்படும் . இது சதவீதத்தில் பொதுவாகத் தரப்படும்.[1]:

 \phi  =  {{e_w} \over {{e^*}_w}} \times 100%


[தொகு] கணிப்பீடு

வளி நீர்க் கலவையொன்றின் ஈரக்குமிழ் வெப்பநிலை மற்றும் உலர் குமிழ் வெப்பநிலை என்பன தெரியுமாயின் சைக்குறேமற்றிக்(psychrometric) அட்டவணை மூலம் சாரீரப்பதனை நேரடியாகக் காணலாம்.

[தொகு] சாரீரப்பதனின் முக்கியத்துவம்

  • காலநிலையைக் கட்டுப்படுத்துவதில் வெப்பநிலையையும் சாரீரப்பதனையும் கட்டுபப்டுத்துவதன் மூவம் கட்டிடங்கள், வாகனங்கள் என்பவற்றில் தகுந்த சூழல் ஏற்படுத்தப்படுவதுடன் இயந்திரங்களிலும் செயற்பாடுகளிலும் தொழில்நுட்பத்திறன் பேணப்படுகிறது.

[தொகு] சுவாத்தியமான சூழல்

மனித உடல் தோலில் வியர்வை ஆவியாவதன் மூலம் குளிரூட்டப்படும் பொறிமுறை கொண்டது. இதனால் ஈரமான வளிக்கு உணர்திறன் கொண்டது. ஈரமான் சூழலிலும் பார்க்க உலர் சூழலில் அதிக ஆவியாதல் முறையைக் காட்டும்.இதனால் சாரீரப்பதன் உயர்வாயுள்ள போது அதிக உஸ்னம் உணரப்படும்.[2].

எ.கா: வளிமண்டல வெப்பநிலை 24°C (75 °F) இருக்கும் போது சாரீரப்பதன் பூச்சியமாக இருக்குமாயின் இவ் வெப்பநிலை 21°C (69 °F) ஆக உணரப்படும். [3]. இதே வெப்பநிலை சாரீரப்பதன் 100% ஆக இருக்கும் போது 27 °C (80 °F)ஆக உணரப்படும். [3]

    • வாகனங்களிலும் கட்டடங்களிலும் இதே நுட்பத்தைப் பயன்படுத்தியே வளிபதனப்படுத்துதல் செய்யப்படுகிது. இதே போல் சில செயற்பாடுகளுக்கு தேவைப்படுகின்ற விசேட இயக்க சூழல் சாரீரப்பதனைக் கட்டுப்படுத்துவதனாலேயே சாத்தியமாக்கப்படுகிறது.

[தொகு] உசாத்துணை

  1. Perry, R.H. and Green, D.W, Perry's Chemical Engineers' Handbook (7th Edition), McGraw-Hill, ISBN 0-07-049841-5 , Eqn 12-7
  2. http://curious.astro.cornell.edu/question.php?number=86
  3. 3.0 3.1 http://science.howstuffworks.com/question651.htm
"http://ta.wikipedia.org/w/index.php?title=சாரீரப்பதன்&oldid=1106350" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்