சாமன் மகால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமன் மகால்
அமைவிடம்இசுலாம்நகர்
ஆள்கூற்றுகள்23.357681, 77.417875
கட்டப்பட்டது1715
க்காக கட்டப்பட்டதுதோஸ்த் முகமது கான்
கட்டிட முறைமுகலாயக் கட்டிடக்கலை, மால்வா

'

சாமன் மகால் (Chaman Mahal) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் போபால் மாவட்டத்திலுள்ள ஓர் அரண்மனையாகும். இது 1715 இல் இசுலாம்நகரின் ஆட்சியாளராக இருந்த ஆப்கானியத் தளபதி தோஸ்த் முகமது கான் என்பவரால் கட்டப்பட்டது. இது மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலிருந்து 11 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

'சாமன்' என்றால் தோட்டம், எனவே இது "தோட்ட அரண்மனை" என்றும் அழைக்கப்படுகிறது. இது தோட்டங்கள் மற்றும் நீரூற்றுகளால் சூழப்பட்டுள்ளது, மேலும் மலர் வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாமன் மகால் முகலாய மற்றும் மால்வா பாணியிலான கட்டிடக்கலைகளில் மணற்கற்களால் ஆனது. மேலும், 12 நுழைவாயில்கள் பெங்காலி கட்டிடக்கலை செல்வாக்கு மிக்க கூரையின் விளிம்புகளுடன் உள்ளன. [1] [2] [3]

போபாலின் ஆட்சியாளராக இருந்த தோஸ்த் முகமது கான் கட்டிய சிவப்பு மணற்கல் அமைப்பானது 'இசுலாம்நகர் கோட்டை' என்றும் அழைக்கப்படுகிறது. இது சார்பாக் பாணி தோட்டத்தைக் கொண்டுள்ளது. பாழடைந்த அரண்மனையில் முகலாய நீர்த் தோட்டமும் குளியலுக்கான இடமும் உள்ளன. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chaman Mahal, Islamnagar". www.nativeplanet.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
  2. "Chaman Mahal, Bhopal". www.indiatourmate.com. Archived from the original on 2019-10-06. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
  3. "Islamnagar – Muhgal Heritage of a Hindu Town – Indian History and Architecture" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-10-06. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
  4. Sarina Singh; Lindsay Brown; Mark Elliott; Paul Harding; Abigail Hole; Patrick Horton, eds. (2009), Lonely Planet India, Country Guide Series (13, illustrated ed.), Lonely Planet, p. 694, ISBN 978-1-74179-151-8
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chaman Mahal
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமன்_மகால்&oldid=3553459" இலிருந்து மீள்விக்கப்பட்டது