சாஃபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாஃபோ

சாஃபோ (Sappho) ஒரு பண்டைய கிரேக்கப் பெண் தன்னுணர்வுக் கவிஞர் ஆவார். லெஸ்போஸ் தீவில் பிறந்த இவரை பின் வந்த கிரேக்கர்கள் ஒன்பது தன்னுணர்வுக் கவிஞர்களுள் ஒருவராகக் கொள்வர். வரலாற்றிலும், கவிதையிலும் இவரை லெபோஸ் தீவின் மிட்டிலீனி (Mytilene) என்னும் நகரத்துடன் தொடர்புபடுத்துவது உண்டு. இவர் பிறந்த இடமாக அதே தீவிலிருந்த இன்னொரு நகரான எர்சோஸ் என்னும் நகரையும் சொல்வது உண்டு. இவர் கிமு 630 க்கும் கிமு 612 க்கும் இடையில் பிறந்து கிமு 570 அளவில் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் எழுதி பண்டைக் காலத்தவர் படித்துச் சுவைத்ததாகச் சொல்லப்படும் பெரும்பாலான கவிதைகள் இன்று கிடைத்தில. எனினும் தப்பியிருக்கும் பகுதிகள் மூலம் அவரது புகழ் நிலைத்துள்ளது.

[தொகு] வாழ்க்கை

சாஃபோவின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரே சமகாலத்து மூலம் அவரது கவிதைகள் மட்டுமே. ஆனாலும் அறிஞர்கள் அவற்றிலிருந்து வரலாற்றுத் தகவல்களைப் பெறமுடியும் என்று நம்பவில்லை. இவர் பற்றிய பெருமளவிலான வாழ்க்கைக் குறிப்புக்களைப் பெற உதவும் பிற்காலத்து மூலங்கள் குறித்தும் சந்தேகங்கள் உள்ளன.

[தொகு] காலம்

ஸ்ட்ராபோ என்பவர் கூற்றுப்படி சாஃபோ, மிட்டிலீனியைச் சேர்ந்த அல்சீயஸ் (பிறப்பு கிமு 620), பித்தாக்கஸ் (கிமு 645 - 570) என்பவர்களது சமகாலத்தவர் ஆவார். அத்தீனியஸ் என்பவரோ சாஃபோ லிடியாவைச் சேர்ந்த அல்யாத்தெஸ் (Alyattes - கிமு 610 - 560) வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் என்கிறார்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்