சர்வேயர் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்வேயர் 3 (Surveyor 3) என்பது1967 ஆம் ஆண்டில் நிலாவின் மேற்பரப்பை ஆராய அனுப்பப்பட்ட அமெரிக்க ஆளில்லா சர்வேயர் திட்டத்தின் மூன்றாவது தரையிறங்கி ஆகும். மேற்பரப்பு - மண் பதக்கூறு அகழ்வை கொண்டு செல்லும் முதல் பணி இதுவாகும்.

சர்வேயர் 3 அப்பல்லோ 12 விண்வெளி வீரர்களான பீட்டே கான்ராடு மற்றும் ஆலன் பீன் ஆகியோரால் நவம்பர் 1969 இல் பார்வையிடப்பட்டது. மேலும் மற்றொரு உலகில்(வானியல்சார் பொருளில்) மனிதர்கள் பார்வையிட்ட ஒரே ஆய்வு இதுவாகும். அப்பல்லோ 12 விண்வெளி வீரர்கள் சர்வேயர் 3 இன் தொலைக்காட்சி படக்கருவி உட்பட உறுப்புகளை அகற்றி , அவற்றை ஆய்வுக்காக புவிக்கு அனுப்பினர்.

நிலாப் புலனாய்வு சுற்றுகலன்[தொகு]

2009 இல் நிலாப் புலனாய்வு சுற்றுகலனால் புகைப்படம் எடுக்கப்பட்ட தரையிறங்கும் களம்

2009 ஆம் ஆண்டில் , நிலாப் புலனாய்வு சுற்றுகலனால்(LRO) சர்வேயர் 3 தரையிறங்கும் களத்தைச் சில விவரங்களில் புகைப்படம் எடுத்தது. இதில் சுற்றியுள்ள விண்வெளி வீரர்களின் காலடிகளையும் காணலாம்.[1] 2011 ஆம் ஆண்டில் LRO குறைந்த உயரத்தில் தரையிறங்கும் இடத்திற்குத் திரும்பி உயர்பிரிதிறன் கொண்ட புகைப்படங்களை எடுத்தது.[2]

மேலும் காண்க[தொகு]

  • கோள் பாதுகாப்பு
  • நிலாவில் உள்ள செயற்கை பொருட்களின் பட்டியல்
  • சர்வேயர் 1

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lunar Reconnaissance Orbiter images of the Surveyor 3 landing site". பார்க்கப்பட்ட நாள் September 4, 2009.
  2. "Lunar Reconnaissance Orbiter returns to the Apollo 12/Surveyor 3 landing site in 2011".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வேயர்_3&oldid=3802188" இலிருந்து மீள்விக்கப்பட்டது