சர்மிசுதா பிரீதம்
சர்மிசுதா பிரீதம் (ஆங்கிலம்: Sarmistha Pritam; அசாமிய மொழி: শৰ্মিষ্ঠা প্ৰীতম) (பி. 18 திசம்பர் 1987) என்பவர் ஓர் அசாமிய எழுத்தாளர் ஆவார். முதுகெலும்புத் தசைநார் சிதைவு உள்ளவர்களுக்கும் இவர் ஆலோசகராகவும் இவர் இருக்கிறார்.
இளமை[தொகு]
சர்மிசுதா பிரீதம் 18 திசம்பர்[1] 1987[2] அன்று அசாம் மாநிலம் நகோன், புலாகுரியில் பிறந்தார்.[3][4] தனது 5 வயதில், இவருக்கு முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.[5] இது 8 வயதிற்குள் குறிப்பிடத்தக்க உடல் குறைபாடுகளை ஏற்படுத்தியது.[2]
இருப்பினும் பிரீதம், பொருளாதாரத்தில் நல்ல மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றார்.[4] பூலகுரி எல். பி. பள்ளியில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய இவர், பூலகுரி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். இவர் தனது உயர்நிலைக் கல்வியை ரகா உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியினை ராகா கல்லூரியிலும் முடித்தார்.
இலக்கிய வாழ்க்கை[தொகு]
பிரீதம் பல்வேறு அசாமியப் பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களின் எழுத்தாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2013-இல் இவரது கட்டுரைகளின் தொகுப்பான தாவோரியா அகக்சோர் பெலி (இருண்ட வானத்தில் சூரியன்), கவிதைத் தொகுப்பு, டோக்மோகலி (பகல் நேரம்) மற்றும் சுயசரிதை ஆத்மகதா ஆகியவற்றை வெளியிட்டார்.[4] இவரது நான்காவது புத்தகம் குழந்தைகளுக்காக அல்புலர் சோபுன் (அல்புலின் கனவு) என்ற தலைப்பில் எழுதப்பட்டது.[4]
2015ஆம் ஆண்டில், இவர் தனது சுயசரிதையின் ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்குத் தேசியப் புத்தக அறக்கட்டளையிலிருந்து மதிப்பூதியம் பெறுவதற்காக உதவி வேண்டி பிரதமர் நரேந்திர மோதிக்குக் கடிதம் எழுதினார்.[2] 2021-இல் இவர் அனதஹின், ரங், பலுகத் பியோலி பேலா மற்றும் போரன் நிகோர் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.[6]
2021ஆம் ஆண்டில், திரைப்படத் தயாரிப்பாளர் பாபி சர்மா பருவா தனது அடுத்த படமான தியோகா (வாக்கிங் இன் தி ஏர்) ப்ரீதமின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என்று அறிவித்தார்.[1]
ஆலோசனை[தொகு]
பிரீதம் அறிவியலை ஊக்குவிக்கும் எல்லோரா விக்யான் மஞ்சா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளார்.[5] 2021ஆம் ஆண்டில், முதுகெலும்புத் தசைச் சிதைவு உள்ளவர்களுக்காகவும், சிகிச்சைக்கான செலவினங்களுக்காக அரசாங்கத்தின் உதவிக்காகவும் இவர் பணியாற்றினார்.[5][6][7]
நூல் வெளியீட்டு பணிகள்[தொகு]
- ஆத்மகதா (சுயசரிதை)
- அல்புலோர் சோபுன் (குழந்தைகள் நாவல்)
- அந்தஹீன் (உந்துதல் பேச்சாளர் நிக் வுஜிசிக்கின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய சுயசரிதை)
- என் முகத்தில் சூரியன் (அசாமிய மொழியில் எழுதப்பட்ட சுயசரிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு, பிரபுல்லா கடோக்கி மொழிபெயர்த்தது. தேசியப் புத்தக அறக்கட்டளை வெளியீடு)
- மேரா ஜிவோன் மேரி கஹானி (கஜேந்திர ரதியின் ஆத்மகதாவின் இந்தி மொழிபெயர்ப்பு. தேசியப் புத்தக அறக்கட்டளை வெளியிட்டது)
- ரங் (நாவல்)
- பலுகத் பியாலி பேலா (நாவல்)
விருதுகள்[தொகு]
- 2012 முனின் போர்கடகி விருது, ஆத்மகதா[3][4][8]
- 2015 மாநில அரசின் இலக்கிய விருது[6][9]
- கீதாஞ்சலி பாருவா மிலி இலக்கிய விருது, 2017
- தேவ்சன்சு சிறப்பு இலக்கிய விருது, 2017
- 2017 கே. கே. கண்டிக்யு, தேசிய நிதியுதவி[10][11]
- கோமன் பர்கோகானி பாடா இலக்கிய விருது, ரங்கிற்காக[12]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Gani, Abdul (December 19, 2021). "Film on writer Sarmistha Pritam announced". The Assam Tribune. https://assamtribune.com/assam/film-on-writer-sarmistha-pritam-announced-1344595.
- ↑ 2.0 2.1 2.2 Kashyap, Samudra Gupta (December 4, 2015). "Wheelchair-bound author takes fight for NBT dues to PM Modi". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/india/india-news-india/wheelchair-bound-author-takes-fight-for-nbt-dues-to-pm-modi/.
- ↑ 3.0 3.1 "Homen Bargohain Nyas Botas". The Assam Tribune. February 1, 2019.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 "Pens defy physical discomfort - Two young authors overcome disabilities to write children’s books". The Telegraph. March 18, 2013. https://www.telegraphindia.com/north-east/pens-defy-physical-discomfort-two-young-authors-overcome-disabilities-to-write-childrens-books/cid/325966.
- ↑ 5.0 5.1 5.2 "Assamese writer Sarmistha Pritam Baruah seeks government aid for medical treatment". தி இந்து. October 9, 2021. https://www.thehindu.com/news/national/other-states/assamese-writer-sarmistha-pritam-baruah-seeks-government-aid-for-medical-treatment/article36912473.ece.
- ↑ 6.0 6.1 6.2 "Prohibitive cost of SMA drug a challenge for patients like Sarmistha Pritam". The Assam Tribune. September 16, 2021.
- ↑ "Ailing writer Sarmistha to move CM for help through State's journalist fraternity". The Assam Tribune. January 11, 2022.
- ↑ "Literary Awards". enajori.com. 5 மே 2011. Archived from the original on 22 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்பிரல் 2013.
- ↑ "Literary, artist, family pension announced". The Assam Tribune. August 14, 2015. https://link.gale.com/apps/doc/A425405559/STND?u=wikipedia&sid=ebsco&xid=4cf7b05b.
- ↑ "KK Handiqui National Awards given away". NE Now News. December 11, 2017. https://nenow.in/north-east-news/assam/kk-handiqui-national-awards-given-away.html.
- ↑ "KK Handiqui Award & fellowships announced". The Sentinel (Guwahati). November 28, 2017. https://link.gale.com/apps/doc/A516159253/STND?u=wikipedia&sid=ebsco&xid=725554f0.
- ↑ Borah, Nilutpal (October 27, 2021). "এগৰাকী অদম্য সাহসী অসমীয়া যুৱতী, বহুতৰ বাবে প্ৰেৰণা হৈ পৰা SMA যোদ্ধা শৰ্মিষ্ঠাক প্ৰয়োজন আপোনাৰ সহায়ৰ". News18 India. https://assam.news18.com/news/assam/young-literary-woman-sarmistha-pritam-who-have-become-an-inspiration-for-many-need-your-help-nilutpal-gb-164977.html.