சமந்தராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமந்தராஜன் (Samantaraja) (சுமார் 7ஆம் நூற்றாண்டு ) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.

இவரது சரியான காலம் உறுதியாகத் தெரியவில்லை. தசரத சர்மாவின் கூற்றுப்படி, இவரது ஆட்சி சுமார் 725 VS (சுமார் 668 பொ.ச.) இல் முடிவடைந்தது. [1] மறுபுறம், வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங் இவரது ஆட்சியை சுமார் 684-709 பொ.ச. எனவும், மாணிக் ராய் '7 ஆம் நூற்றாண்டின் சாகம்பரியின் சகமான ஆட்சியாளரான சமந்தராஜா' என்றும் அடையாளம் காட்டுகிறார். [2]

இவரது வழித்தோன்றலான சோமேசுவரரின் 1170 பொச. தேதியிட்ட பிஜோலியா பாறைக் கல்வெட்டு, இவர் அகிச்சத்திரபுரத்தில் வத்ச முனிவரின் கோத்திரத்தில் பிறந்தார் என்று கூறுகிறது. [3] அகிச்சத்ரபுரம் நவீன நாகௌருடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. [4]

இவரது மூதாதையரான வாசுதேவன், வரலாற்றுப் பதிவுகளில் இருந்து அறியப்படுகிறார். ஆனால் இருவருக்கும் இடையேயான உறவு உறுதியாகத் தெரியவில்லை. வாசுதேவனுக்குப் பிறகு, சகமானர்கள் வர்தனர்களால் மறைக்கப்பட்டனர். மேலும் சமந்தராஜன் சாகம்பரியில் சகமான ஆட்சியை மீட்டெடுத்தார் என்று வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங் கருதுகிறார். சாகம்பரி தெய்வத்தின் அருளால் மாணிக் ராய் சௌகான் (சகமான) குடும்பத்தின் செல்வத்தை மீட்டெடுத்தார் என்று இடைக்கால பார்டிக் புராணங்கள் கூறுகின்றன. மாணிக் ராயை சமந்தா என்று சிங் அடையாளம் காட்டுகிறார். [5]

சமந்தராஜனுக்குப் பிறகு நரதேவன் ஆட்சிக்கு வந்தார். [6]

சான்று[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Dasharatha Sharma 1959.
  2. R. B. Singh 1964.
  3. R. B. Singh 1964, ப. 11.
  4. R. B. Singh 1964, ப. 89.
  5. R. B. Singh 1964, ப. 85.
  6. Dasharatha Sharma 1959, ப. 24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமந்தராஜன்&oldid=3429051" இலிருந்து மீள்விக்கப்பட்டது