சந்தி பறவைகள் சரணாலயம்

ஆள்கூறுகள்: 27°18′05″N 79°58′13″E / 27.301444°N 79.970359°E / 27.301444; 79.970359
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தி பறவைகள் சரணாலயம்
Sandi Bird Sanctuary, Hardoi, Uttar Pradesh
Map showing the location of சந்தி பறவைகள் சரணாலயம் Sandi Bird Sanctuary, Hardoi, Uttar Pradesh
Map showing the location of சந்தி பறவைகள் சரணாலயம் Sandi Bird Sanctuary, Hardoi, Uttar Pradesh
அமைவிடம்சந்தி, ஹர்தோய் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
அருகாமை நகரம்கார்தோய்
ஆள்கூறுகள்27°18′05″N 79°58′13″E / 27.301444°N 79.970359°E / 27.301444; 79.970359
நிருவாக அமைப்புஉத்தரப் பிரதேச அரசு
வலைத்தளம்http://upforestwildlife.org/sandisanctuary/index.html
அலுவல் பெயர்சந்தி பறவைகள் சரணாலயம்
தெரியப்பட்டது26 செப்டம்பர் 2019
உசாவு எண்2409[1]

சந்தி பறவைகள் சரணாலயம் (Sandi Bird Sanctuary) இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும்.

இந்த சரணாலயம் உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள சாண்டியில் ஹர்தோய் - சாண்டி சாலையில் 19 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சந்தி பறவைகள் சரணாலயம் ஹர்தோய் மாவட்டத்தின் சந்தி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள நவாப்கஞ்சிலிருந்து பிரதான சாலையில் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சந்தி பறவைகள் சரணாலயம் 1990ஆம் ஆண்டில் உள்ளூர் பறவைகள் மற்றும் வலசை வரும் பறவைகளுக்காக இயற்கையான வாழ்விடங்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது செப்டம்பர் 2019 முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளமாக நியமிக்கப்பட்டுள்ளது. சந்தி பறவைகள் சரணாலயம் "தஹார் ஜீல்" (ஜீல் = ஏரி) என்றும் இதன் பண்டைய பெயரால் அறியப்படுகிறது. ஏரியின் பரப்பளவு 309 ஹெக்டேர் (3.09 கிமீ²) ஆகும். கருண் கங்கா என்று அழைக்கப்பட்ட கர்ரா ஆறு சரணாலயத்திற்கு அருகில் செல்கிறது.

புலம்பெயர்ந்த பறவைகள் சந்தி பறவைகள் சரணாலயத்தை அடைவதற்கு முன்பு ஆற்றின் கரையில் ஓய்வெடுக்கின்றன. நவம்பர் மாதத்தில் குளிர்காலத்தின் தொடக்கத்தில் புலம்பெயர்ந்த பறவைகள் சரணாலயத்திற்கு வரத் தொடங்கும். சந்தி சுற்றுலாத் தலமாக உள்ளது. பறவை ஆர்வலர்களுக்குக் குறிப்பாகச் சிறந்த இடமாக உள்ளது. இந்த சரணாலயத்திற்கு வருகை தரச் சிறந்த நேரம் திசம்பர் முதல் பிப்ரவரி வரை ஆகும். இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் ஹர்தோய் ஆகும். இது 19 கி.மீ. தொலைவில் உள்ளது.

கடந்த காலத்தில், அரிதான சைபீரியக் குரூசு லுகோக்ஜெரானசு இங்கு காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sandi Bird Sanctuary". ராம்சர் சாசனம் Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
  2. Woistencroft, James A.; S.A. Hussain; C.K. Varshney. "Dahar and Sauj (Soj) Jheels". India. Ramsar Sites Information Service. பக். 40–41 இம் மூலத்தில் இருந்து 2011-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110626233132/http://ramsar.wetlands.org/Portals/15/India.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தி_பறவைகள்_சரணாலயம்&oldid=3781943" இலிருந்து மீள்விக்கப்பட்டது