சண்டா - முண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டா, முண்டாவுடன் சண்டையிடும் காளியை சித்தரிக்கும் பஹாரி ஓவியம். சு. 1825-35, காகிதத்தில் கௌவாச், 17 × 24 செ.மீ., ரிஜ்க்ஸ் அருங்காட்சியகம்.

இந்து சமய நூலான தேவி மகாத்மியத்தில் உள்ளபடி சண்டாவும், முண்டாவும் (Chanda and Munda) அசுரர்களான சும்பன் - நிசும்பன் ஆகிய அரக்கர்களுக்கு சேவை செய்கின்றனர். ஒரு நாள், அவர்கள் பார்வதியைக் காண்கின்றனர். அவளுடைய அழகைக் கண்டு வியக்கின்றனர். அவர்கள் இந்த தேவியின் அழகைக் குறித்து சும்பனிடம் சொல்கின்றனர். சும்பன் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். தேவியின் கைகளில் அவனது தளபதியான தும்ரலோச்சனா கொல்லப்பட்ட பிறகு, சும்பன் சண்டாவையும் முண்டாவையும் அவளுடன் சண்டையிட்டு அவளை வலுவந்தமாக தன்னிடம் கொண்டு வருமாறு கட்டளையிடுகிறான். சண்டாவும் முண்டாவும் தேவியை அணுகும்போது, அவள் கருப்பாக மாறுகிறாள், அவள் நெற்றியில் இருந்து காளி தோன்றி அவர்களைக் கொல்கிறாள். பின்னர் சண்டாவையும் முண்டாவையும் கொன்றதால், காளிக்கு " சாமுண்டி " என்ற பெயர் ஏற்படுகிறது. [1] பின்னர், ராக்தாபிஜா என்ற அரக்கன் அசுரர்களால் அனுப்பப்பட்டான், ஆனால் காளி தேவியால் அவன் கொல்லப்படுகிறான். [2] [3]

கந்த புராணத்தின் படி, சண்டாவும் முண்டாவும் சூரியனை வழிபட்டனர்.

மேலும் பார்க்கவும்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. Aijazuddin, FS (2014). "Devi-Yatras Here & There". Journal of the Pakistan Historical Society 62 (2): 113–115. https://www.proquest.com/openview/ec9e4b081372a8d96bbdae50bfaca0c0/1?pq-origsite=gscholar&cbl=646551. 
  2. "Vol. 17, 1860 of The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland on JSTOR". பார்க்கப்பட்ட நாள் 2022-08-11.
  3. Goswami, Meghali; Gupta, Ila; Jha, P (2005). "Sapta matrikas in Indian art and their significance in Indian sculpture and ethos: A critical study". Anistoriton 9 (A051). https://www.researchgate.net/publication/242217256. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டா_-_முண்டா&oldid=3823937" இலிருந்து மீள்விக்கப்பட்டது