சட்ட உதவி திணைக்களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்ட உதவி திணைக்களம் (Legal Aid Department) என்பது ஹொங்கொங் அரசாங்கத்தின் ஒரு பிரதானப் பிரிவாகும். இதனை சுருக்கமாக (LAD) என்பர். இத்திணைக்களம் ஹொங்கொங்கில் சட்ட உதவி கோரி விண்ணப்பிப்போருக்கு, விண்ணப்பதாரியின் வழக்கு தொடுத்தலின் காரணம் நியாயம் என உணருதலின் அடிப்படையில் இந்த திணைக்களம் தாம் விரும்பும் சட்டவாளரை தமது சார்பில் வாதிடுவதற்காக அனுமதியளிக்கும். அதாவது வழக்கு தொடுப்போர் அல்லது வழக்கை எதிர்கொள்வோர் தமது பக்கம் வாதிடும் சட்டவாளருக்கான நிதியை வழங்கும்.

விண்ணப்பம் ஏற்றுக்கொண்டதன் பின்னர், இந்த சட்ட உதவி திணைக்களம் ஹொங்கொங் சட்டவாளர்களினதும் பெயர் பட்டியலை வழங்கும். உதவி கோருவோர் தமக்கு விருப்பமான சட்டவாளரை தெரிவுச்செய்துக்கொள்ளும் உரிமையும் உள்ளது.

சட்ட உதவி பெறுவதற்கான தகுதி[தொகு]

இந்த திணைக்களத்திடம் நிதியுதவி பெறுவதற்கு தம்மால் நிதியற்ற நிலமை ஒன்றே போதுமான காரணமாகும். கையில் ஐந்து சதம் கூட இல்லாதவர் என்றாலும் இத்திணைக்களத்திடம் சட்ட உதவி கோரி விண்ணப்ப்பிக்கலாம். ஹொங்கொங் டொலர்கள் HK$100,000.00 க்கு மேல் வைப்பகங்களில் உள்ளோர் விண்ணப்பிக்க முடியாது; ஏனையோர் விண்ணப்பிக்கலாம்.

யார் உதவி பெறலாம்?[தொகு]

இந்த திணைக்களத்திடம் சட்ட உதவி பெறுவோர், இந்த நாட்டு குடியுரிமை உள்ளவராகவோ, நிரந்தர வதிவுரிமை பெற்றவராகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. தம்பக்கம் வழக்கத் தொடரக்கூடிய போதியக் காரணங்கள் அல்லது நியாயம் இருப்பதனை சட்ட உதவி திணைக்களம் உணருவதன் அடிப்படையில் இவ்வுதவி வழங்கப்படும். இந்த நாட்டில் வேலை வாய்ப்புக்காக வந்தோரும், இந்த நாட்டிற்கு அரசியல் புகலிடம் கோரி வந்திருப்போரும் கூட இந்த சட்டவுதவியை பெறலாம்.

அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்கள்[தொகு]

இந்த நாட்டில் எந்தவித உரிமையும் இல்லாதவர்களான, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஹொங்கொங் வந்து அரசியல் புகலிடம் கோரியிருப்போருக்கும் இந்த திணைக்களம் சட்டவுதவி வழங்கி வருகிறது. சிலரது வழக்குகளின் போது HK$ 150,000.00 வரை கூட இந்த திணைக்களம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு[தொகு]

ஹொங்கொங் சட்ட ஒழுங்கு முறையாகப் பேணப்படும் ஒரு நாடாகும். சட்ட உதவி பெறுவோரை இழுத்தடிப்பு செய்தல், கையூட்டு கோரல், உதாசீனப்படுத்துதல், கௌரவக் குறைவாகப் பேசுதல், அவமதித்தல் போன்ற எந்த செயலையும் இங்கு காண்பதற்கில்லை. ஹொங்கொங்கில் 1 முதல் 10 ஆண்டுகள் வரை அரசியல் புகலிடக் கோரிக்கையாளராக வாழ்ந்து, இந்த சட்ட உதவி திணைக்களத்தின் ஊடாக உதவிப்பெற்று, ஹொங்கொங் நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடுத்தோரிடமும் இவ்வாறான எந்த ஒரு குற்றச்சாட்டும் இதுவரைக் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த நாட்டில் சட்ட ஒழுங்குகள் பேணப்படுத்தலில் உள்ள ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாட்டுக்கு வந்தோரும் இந்த நாட்டை மதிப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்ட_உதவி_திணைக்களம்&oldid=1358707" இலிருந்து மீள்விக்கப்பட்டது