கோ கிழான் அடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேரன் பெருமாள் உறவுகள் (கி.பி. 9 முதல் 10 ஆம் நூற்றாண்டு)

கோ கிழான் ஆடிகள் ரவி நீலி என்பது இடைக்கால தென்னிந்தியாவில் சேர / பெருமாள் இராச்சியத்தின் இராணிகள் / இளவரசிகளின் பாரம்பரிய பட்டப் பெயராகும். [1] துவக்கத்தில் கிழான் அடிகள் என்பது ஒரு தனிப்பட்ட நபருக்கு இடப்பட்ட பெயர் (அரச பட்டம் அல்ல) என்று கருதப்பட்டது.

கேரளம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்வரும் கல்வெட்டுகளில் இந்தப் பெயர் காணப்படுகிறது.

  1. "கிழான் அடிகள் ரவி நீலி", என்பவர் சேரன் குலசேகரனின் (9 ஆம் நூற்றாண்டின் இடையில்) மகள் மற்றும் விஜயராஜனின் மனைவி. இவரது பெயர் திருநந்திக்கரை கல்வெட்டில் (கி.பி 9 ஆம் நூற்றாண்டு) குறிப்பிடப்பட்டுள்ளது.
  2. "கோ கிழான் அடிகள்", என்பவர் சோழ இளவரசன் இராஜாதித்தனின் தாயார். இவரது பெயர் சோழ மன்னன் முதலாம் பராந்தகனின் (கி.பி.907-955 ) திருநாவலூர்/திருமுனநாவலூர் கல்வெட்டில் (கி.பி 935, 28 ஆவது ஆட்சியாண்டு) குறிப்பிடப்பட்டுள்ளது.
  3. "கிழான் அடிகள் ரவி நீலி", என்பவர் சேரன் விஜயரகனின் மகளாவார் (9ஆம் நூற்றாண்டின் நடுவில்), இவரது பெயர் முதலாம் பாராந்தக சோழனின் திருவெற்றியூர் கல்வெட்டில் (கி.பி. 936, 29ஆம் ஆட்சியாண்டு) குறிப்பிடப்பட்டுள்ளது.
  4. "கிழான் அடிகள்" என்ற பெயரானது இவரது கணவர் முதலாம் பராந்தக சோழனின் பெயரோடு சேர்ந்து திருவல்லா செப்பேடுகளில் ( 109-111 வரிகள்) குறிப்பிடப்பட்டுளது.
  5. சேர / பெருமாள் மன்னரின் (கி.பி. 943 - 962) திருகாக்கரை கல்வெட்டில் (கி.பி 953) "கிழான் அடிகள் சத்திர சிகாமணி"" என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

இவர்கள் ஒரே இணையான தகுதியுள்ள இரண்டு அல்லது மூன்று இளவரசிகள் அல்லது சகோதரிகள் என்று கருத வாய்ப்பு உள்ளது. இவர்கள் சகோதரிகளாக இருந்தால், மன்னர் முதலாம் பரந்தகன் இரண்டு சேர இளவரசிகளை (அல்லது ராஜாதித்தர் மற்றும் அரிஞ்சய சோழர் என்ற இரண்டு மகன்களைப் பெற்ற தாய்மார்கள்,) திருமணம் செய்து கொண்டிருக்கவேண்டும். [2]

சேர இளவரசி ஒருவருக்கும் பராந்தகருக்கும் இடையிலான திருமணம், கி.பி 910, ஆண்டய மேலைக் கங்க மன்னர் இரண்டாம் பிருதிவிபதி அத்திமல்லனின் உதயேந்திரம் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. [1] [3]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 96-101, 437, 442, 445 and 473.
  2. George Spencer, ‘Ties that Bound: Royal Marriage Alliance in the Chola Period’, Proceedings of the Fourth International Symposium on Asian Studies (Hong Kong: Asian Research Service, 1982), 723.
  3. South Indian Inscriptions 2 (1895), no. 76: v. 8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ_கிழான்_அடிகள்&oldid=3059461" இலிருந்து மீள்விக்கப்பட்டது