கோவிந்த் நரேன் மாள்வியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ. ந. மாள்வியாG.
N. Malviya
பிறப்புஇந்தியா மத்தியப் பிரதேசம்
பணிதொழுநோய் நிபுணர்
அறியப்படுவதுதொழுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிப்பது.
விருதுகள்பத்மசிறீ
மரு. பி. சி. ராய் விருது

கோவிந்த் நரேன் மாள்வியா (Govind Narain Malviya) ஓர் இந்திய மருத்துவர் மற்றும் தொழுநோய் நிபுணர் ஆவார். கோ.ந.மாள்வியா என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். இந்தியாவில் தொழுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்[1]. ஆக்ராவிலுள்ள தொழுநோய்க்கான மத்திய யல்மா நிறுவனத்தின் துணை இயக்குநராக இவர் பணிபுரிகிறார்[2]. நிகழ்த்திய சொற்பொழிவுகள் பல இவருக்கு விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளன[2]. பல மருத்துவ கட்டுரைகளை மால்வியா எழுதியுள்ளார். ரிசர்ச் கேட் என்ற அறிவியல் ஆவணங்களின் நிகழ்நேர களஞ்சியம் மால்வியாவின் 109 கட்டுரைகளை பட்டியலிட்டுள்ளது[3]. 1991 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[4]. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் மருத்துவ பிரிவுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பிதான் சந்திரா ராய் விருதை இந்திய மருத்துவக் கழகம் மால்வியாவுக்கு வழங்கியது[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Medical Registry Search". Medical Council of India. 2015. Archived from the original on 5 October 2015. பார்க்கப்பட்ட நாள் October 3, 2015.
  2. 2.0 2.1 "Jalma Trust Fund Oration Award" (PDF). Indian Council of Medical Research. 2015. Archived from the original (PDF) on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் October 3, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "ResearchGate articles". ResearchGate. 2015. பார்க்கப்பட்ட நாள் October 3, 2015.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
  5. "20 doctors to get B.C. Roy award". The Hindu. 1 July 2001. பார்க்கப்பட்ட நாள் October 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த்_நரேன்_மாள்வியா&oldid=3929411" இலிருந்து மீள்விக்கப்பட்டது