கோல்கொண்டா விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோல்கொண்டா விரைவுவண்டி
அலேரு தொடருந்து நிலையத்தில் WAP4 இழுவை வண்டியுடன் கோல்கொண்டா விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நிகழ்வு இயலிடம்தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம்
நடத்துனர்(கள்)தெற்கு மத்திய ரயில்வே
வழி
தொடக்கம்குண்டூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
முடிவுசிக்கந்தராபாத் சந்திப்பு
ஓடும் தூரம்385 km (239 mi)
சராசரி பயண நேரம்8 மணி, 15 நிமிடங்கள் (இருவழிப் பயணத்துக்கான மொத்த நேரம்)
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்17201 / 17202
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்சாதன இருக்கைப் பெட்டி, இரண்டாம்வகுப்பு இருக்கைப்பெட்டி, முன்பதிவற்ற பெட்டி
இருக்கை வசதிஉள்ளது
படுக்கை வசதிஇல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்46.91 km/h (29.15 mph) சராசரி வேகம் (நிறுத்தங்களுடன்)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

கோல்கோண்டா விரைவுவண்டி (Golconda Express) செகந்திராபாத் மற்றும் ஆந்திராவின் குண்டூர் ஆகிய நகரங்களுக்கிடையே இயங்கும் நகரிடைத் தொடருந்து ஆகும். இந்தியாவின் தெற்கு மத்திய ரயில்வேயினால் இயக்கப்படும் கோல்கோண்டா எக்ஸ்பிரஸ் 17201 / 17202 என்ற வண்டி எண்ணுடன் செயல்படுகிறது. இது மற்ற அதிவிரைவு ரயில்களைப்போல் அல்லாமல், மெதுவாக ஓடக்கூடிய ரயிலாகும். இது 383 கிலோமீட்டர்களை கடக்க 8 மணிநேரத்தினை எடுத்துக்கொள்கிறது. இந்த இடைப்பட்ட தூரத்தில் இருக்கும் ரயில் நிறுத்தங்கள் அனைத்திலும் நின்று செல்வதால், மெதுவான பயணத்தினை பயணிகளுக்கு அளிக்கிறது. மொத்த பயணநேரத்தில் சராசரியாக 8 மணிநேரம் 15 நிமிடங்களில் 385 கிலோமீட்டர்களைக் (239 மைல்) கடக்கிறது. தினசரி செயல்படும் ரயில்சேவையாக இது இயங்கி வருகிறது. நிறுத்துமிடங்களையும் கணக்கில் கொண்டால் இதன் வேகம் மணிக்கு 46.91 கிலோமீட்டர் (29.15 மைல்) ஆகும்.

17202 என்ற ரயில் வண்டி எண்ணுடன் செகந்திரபாத் சந்திப்பில் இருந்து குண்டூர் சந்திப்பிற்கும், 17201 ரயில் என்ற வண்டி எண்ணுடன் குண்டூர் சந்திப்பில் இருந்து செகந்திரபாத் சந்திப்பிற்கும் கோல்கோண்டா விரைவுவண்டி செயல்படுகிறது.

பெயர்க் காரணம்[தொகு]

ஹைதராபாத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோல்கொண்டா கோட்டையினை நினைவுகூரும் வகையில் கோல்கோண்டா விரைவுவண்டி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. குதுப் ஷாஹி வம்சத்தினரால் உருவாக்கப்பட்ட இக்கோட்டை ஹைதராபாத்தில் குறிப்பிடத்தக்க இடங்களில் ஒன்று, அவர்கள் வம்சத்தின் அடையாளம்.

பதிவுகள்[தொகு]

1973 ஆம் ஆண்டு கோல்கோண்டா எக்ஸ்பிரஸ், இந்தியாவின் நீராவியினால் இயங்கும் ரயில்களில் மிக விரைவானது என்று பெயர் பெற்றது.

வழிகள்[தொகு]

செகந்திராபாத்தில் இருந்து குண்டூருக்குச் செயல்படும் கோல்கோண்டா எக்ஸ்பிரஸ் விஜயவாடா, வாரங்கல் மற்றும் காஸிபேட் ஆகியே நகரங்களின் வழியே செல்கிறது. குண்டூரில் இருந்து காலையில் 5.45 மணிக்கு புறப்படும் கோல்கோண்டா எக்ஸ்பிரஸ் செகந்திராபாத்தினை மதியம் 1.45 மணியளவில் சென்றடைகிறது. கோல்கோண்டா எக்ஸ்பிரஸ் செகந்திராபாத்தில் இருந்து மதியம் 1.05 க்கு புறப்பட்டு குண்டூரினை 8.20 மணியளவில் சென்றடைகிறது.

விபத்துக்கள்[தொகு]

2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி கோல்கோண்டா எக்ஸ்பிரஸ் வாரங்கலுக்கு அருகேயுள்ள பாலத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 21 பேர் இறந்ததாக அறியப்படுகிறது.[1][2] 1999 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச மாநிலத்தின், வாரங்கல் மாவட்டத்தில் கோல்கோண்டா எக்ஸ்பிரஸ் ஃகான்புர் ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டது.[3]

2014 ஆம் ஆண்டு கோல்கோண்டா எக்ஸ்பிரஸின் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தினைப் பற்றி அறிந்தவுடன் அடுத்தடுத்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அங்கிருந்து வெளியே குதித்து தப்பித்தனர்.[4]

வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்[தொகு]

[5]

எண். நிலையத்தின் பெயர் (குறியீடு) வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம்(நிமிடங்கள்) கடந்த தொலைவு (கி.மீ) நாள் பாதை
1 செகந்திரபாத் சந்திப்பு (SC) தொடக்கம் 13:05 0 0 1 1
2 மௌலா அலி (MLY) 13:14 13:15 1 6 1 1
3 போங்கிர் (BG) 13:39 13:40 1 47 1 1
4 அலேர் (ALER) 13:54 13:55 1 70 1 1
5 ஜாங்கௌன் (ZN) 14:04 14:05 1 84 1 1
6 ஃகான்புர் (GNP) 14:34 14:35 1 112 1 1
7 காஸிபேட் சந்திப்பு (KZJ) 15:05 15:07 2 132 1 1
8 வாரங்கல் (WL) 15:20 15:22 2 142 1 1
9 நெகோன்டா (NKD) 15:44 15:45 1 172 1 1
10 கேசமுத்திரம் (KDM) 15:57 15:58 1 188 1 1
11 மஹ்பூபபாத் (MABD) 16:20 16:25 5 203 1 1
12 கார்லா (GLA) 16:43 16:44 1 222 1 1
13 டோர்னக்கல்லு சந்திப்பு (DKJ) 16:51 16:52 1 227 1 1
14 கம்மம் (T) 17:15 17:16 1 250 1 1
15 போனா கலு (BKL) 17:29 17:30 1 278 1 1
16 மதிரா (MDR) 17:43 17:44 1 294 1 1
17 எருபலேம் (YP) 17:54 17:55 1 309 1 1
18 கொண்டாபள்ளி (KI) 18:54 18:55 1 333 1 1
19 ராயனாபாட் (RYP) 19:01 19:02 1 339 1 1
20 விஜயவாடா சந்திப்பு (BZA) 19:55 20:15 20 351 1 1
21 கிருஷ்ணா கானல் (KCC) 20:28 20:29 1 356 1 1
22 மங்களகிரி (MAG) 20:37 20:38 1 363 1 1
23 நம்புரு (NBR) 20:49 20:50 1 374 1 1
24 கோகாமுக் (PDKN) 20:54 20:55 1 377 1 1
25 குண்டூர் சந்திப்பு (GNT) 21:20 முடிவு 0 383 1 1

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோல்கொண்டா எக்ஸ்பிரஸ் எண்ணிக்கை 21 ஆக உயர்வு". ரெடிஃப். 3 ஜூலை 2003. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "கோல்கொண்டா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது 18 இறந்த". ரெடிஃப். 1 ஜனவரி 2010. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "குடமி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: பல ரயில் விபத்துக்கள் வாரங்கல் மாவட்டத்தில் சாட்சி". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 ஆகஸ்ட் 2010. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "கோல்கொண்டா எக்ஸ்பிரஸ் திடீர் தீ விபத்து". தெலுகுநோவ். Archived from the original on 2016-04-04.
  5. "கோல்கொண்டா எக்ஸ்பிரஸ்". ச்லீர்த்றிப். Archived from the original on 2015-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்கொண்டா_விரைவுவண்டி&oldid=3759994" இலிருந்து மீள்விக்கப்பட்டது