கோட்டைப்பட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டைபட்டினம், தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்தின், மணமேல்குடி வட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் உள்ள கடற்கரை கிராமம் ஆகும். வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்த இக்கிராமம் புதுக்கோட்டையிலிருந்து 71 கிமீ தொலைவிலும், மணமேல்குடியிலிருந்து 9 கிமீ தொலைவிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது.

அருகமைந்த ஊர்கள் அம்மாபட்டினம் (6 கிமீ) விச்சூர், நெல்வேலி, (8 கிமீ) மணமேல்குடி (8 கிமீ) ஆகும். இதன் அருகமைந்த நகரங்கள் பேராவூரணி, காரைக்குடி, பட்டுக்கோட்டை ஆகும். கோட்டைப்பட்டினத்தில் கார்ப்பரேஷன் வங்கியின் கிளை உள்ளது. இக்கிளையின் ஐஎப்எப்எஸ்சி குறியீடு எண் COR0001378 ஆகும். [1]

இக்கிராமத்தின் தொலைபேசி குறியிடு எண் 04371 ஆகும். இங்கு அஞ்சலகம் நிலையம் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 614619 ஆகும்.

கோட்டைப்பட்டினம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]

இக்கிராமத்தின் தெற்கில் திருவாடானை ஊராட்சி ஒன்றியம், மேற்கில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், வடக்கில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

கல்வி நிலையங்கள்[தொகு]

  • ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி
  • அரசு மேல்நிலைப் பள்ளி
  • அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.mapsofindia.com/ifsccode/corporation-bank/tamil-nadu/kottapattinam/kottaipattinam.html
  2. Kottaipattinam
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டைப்பட்டினம்&oldid=3432250" இலிருந்து மீள்விக்கப்பட்டது