கொல்லம் போர்த்துகீசியக் கல்லறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்த்துகீசியக் கல்லறை
டச்சுக் கல்லறை
கொல்லம் போர்த்துகீசியக் கல்லறை is located in கொல்லம்
கொல்லம் போர்த்துகீசியக் கல்லறை
கொல்லம் போர்த்துகீசியக் கல்லறை is located in கேரளம்
கொல்லம் போர்த்துகீசியக் கல்லறை
Details
Established1519
Locationதங்கசேரி, கொல்லம் நகரம்
Countryஇந்தியா
Coordinates8°52′55″N 76°34′02″E / 8.881937°N 76.567309°E / 8.881937; 76.567309
Typeபோத்துக்கீசர்
Styleபோர்த்துகீசிய காலனித்துவக் கட்டிடக்கலை
Number of gravesதெரியவில்லை

கொல்லம் போர்த்துகீசிய கல்லறை (Portuguese Cemetery, Kollam) இந்தியாவின் கொல்லம் நகரில் உள்ள தங்கசேரியில் அமைந்துள்ளது. போர்த்துகீசியர்களின் படையெடுப்பின் ஒரு பகுதியாக 1519 ஆம் ஆண்டில் இது கட்டப்பட்டது.. டச்சுக்காரர்களின் படையெடுப்பிற்குப் பிறகு, இது டச்சு கல்லறையாக மாறியது. தங்கசேரி கலங்கரை விளக்கத்திற்கும் இக்கல்லறைக்கும் இடையே உள்ள ஒரு சிறிய கால்வாயான பக்கிங்காம் கால்வாய் போர்த்துகீசிய கல்லறைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.[1][2] தங்கசேரி கடற்கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் கடற்கொள்ளையர்களின் குழு ஒன்று முன்பு கல்லறையில் வசித்து வந்தது.[3] புனித தாமசு கோட்டை மற்றும் போர்த்துகீசிய கல்லறையின் எச்சங்கள் தங்கசேரியில் இன்னும் உள்ளன.

வரலாறு[தொகு]

கொல்லம் நகரம் இந்தியாவின் மிகப் பழமையான போர்த்துகீசிய - டச்சு - ஆங்கில குடியேற்றங்களில் ஒரு பகுதியாகும். தங்கசேரியானது அவர்களின் செயல்பாட்டின் மையமாக இருந்தது. டாங்கி என்று பிரபலமாக அறியப்படும் தங்கநேரி போர்த்துகீசியர்கள், பிற ஐரோப்பியர்கள், அரேபியர்கள், சீனர்கள் மற்றும் யூதர்களின் முந்தைய வர்த்தக புறக்காவல் நிலையமாக இருந்தது.[4]

இந்த தளம் 1920 முதல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மையமாக பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். அதிகாரிகள் இந்த எச்சங்களை சரியாகப் பாதுகாக்கவில்லை என்றும், இந்த பாரம்பரிய தளத்தில் சில அடுக்குமாடி கட்டுமானங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்றும் சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள் உள்ளன.[5]

அமைவிடம்[தொகு]

தங்கசேரியில் உள்ள பழங்கால குடியிருப்பு மற்றும் கலங்கரை விளக்கத்திற்கு மிக அருகில் கல்லறை உள்ளது. இந்த பாரம்பரிய தளத்திற்கு மிக அருகில் கொல்லம் துறைமுகம் உள்ளது. கொல்லம் நகரம் இக்கல்லறையிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tangasseri - OOCITIES". OOCITIES. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
  2. "Archaeological site and remains". Archaeological Survey of India - Thrissur Circle. Archived from the original on 4 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "A brief history of Tangasseri". Rotary Club of Tangasseri. Archived from the original on 22 November 2013. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
  4. "Superb India Tours - Kollam". Superb India Tours. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
  5. "Colonial Voyage - Tangasseri". Mathrubhumi. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.