கொரியாவின் ஒருங்கிணைந்த மகளிர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரியாவின் ஒருங்கிணைந்த மகளிர் சங்கம்
Yǒsǒng tanch'e yǒnhap
உருவாக்கம்1987
வகைஅரசு சாரா நிறுவனம்
தலைமையகம்
  • சியோல், தென்கொரியா

கொரியாவின் ஒருங்கிணைந்த மகளிர் சங்கம் (KWAU அல்லது Yǒsǒng tanch'e yǒnhap) என்பது தென் கொரியாவில் பெண்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் 33 சங்கங்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் செயல்படும் அமைப்பாகும்.[1] இது கொரிய தேசிய மகளிர் குழுவுடன் இணைந்து, கொரியா முழுவதும் பெண்களின் பிரச்சனைகள் மற்றும் பெண்ணியம் தொடர்பான அரசு சாரா நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது.

வரலாறு[தொகு]

கொரிய ஒருங்கிணைந்த மகளிர் சங்கம் பிப்ரவரி 1987-ல் நிறுவப்பட்டது. இது கொரிய அரசாங்கத்திற்கு எதிராக குவான் இன் சுக் கொண்டு வந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை அடுத்து இடதுசாரி, தொழிலாளர் சார்பு பெண்ணியவாதிகளால் உருவாக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்கள் நீல கழுத்துப்பட்டைத் தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள், இல்லத்தரசிகள், கல்லூரி மாணவிகள், கிராமப்புற பெண்கள் மற்றும் நகர்ப்புற ஏழை பெண்கள் என பலதரப்பட்ட குழுவாக இருந்தனர். கொரிய ஒருங்கிணைந்த மகளிர் சங்கம் மின்ஜங் இயக்கம் மற்றும் தேசிய ஜனநாயக இயக்கத்துடன் தொடர்புடையது.[2] இக்காலத்தில் பெண்களின் உரிமைகள் வலியுறுத்தப்பட்டன. வாழ்நாள் முழுவதும் சமமான வேலை, மகப்பேறு பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் பெண்களின் அமைதிக்கு எதிரான பாலியல் வன்முறை உள்ளிட்ட பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தின் சில வலியுறுத்தப்பட்டுள்ளன.[3] ஆரம்பத்தில் 21 நிறுவனங்கள் ஒன்றிணைந்து கொரிய ஒருங்கிணைந்த மகளிர் சங்கத்தினை உருவாக்கியது. கொரிய ஒருங்கிணைந்த மகளிர் சங்கத்தின் இணைந்துள்ள சில முக்கிய அமைப்புகள், குடியரசிற்கான மகளிர் சங்கம், கொரியா பெண்கள் ஹாட் லைன், பெண்கள் செய்தித்தாள் (இப்போது பெண்கள் செய்திகள் ), கொரிய பெண் தொழிலாளர்கள் சங்கம், கொரிய கத்தோலிக்க விவசாயிகள், பெண்கள் குழு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ching, Miriam; Louie, Yoon (1995-07-01). Minjung feminism: Korean women's movement for gender and class liberation. பக். 417–430. doi:10.1016/0277-5395(95)80033-L. 
  2. Nam, Jeong-Lim (2000). Gender Politics in Transition to Democracy. பக். 94–112. doi:10.1353/ks.2000.0012. http://unpan1.un.org/intradoc/groups/public/documents/apcity/unpan004700.pdf. பார்த்த நாள்: 4 November 2015. 
  3. Kyounghee, Kim (Summer 2002). "A Frame Analysis of Women's Policies of Korean Government and Women's Movements in the 1980s and 1990s". Korea Journal. பார்க்கப்பட்ட நாள் 18 October 2019.